ழுவேதம் பசுவதன்பால் மெய்யா கமநால்வர்
ஓதுந் தமிழதனி னுள்ளுறு நெய்ழு |
என்னும் ஆன்றோர்
வாக்குங் காண்க. (22)
பருமுத்த முலையாள் பங்க னருளினாற் பசும்பொற் றாளந்
திருமுத்தின் சிவிகை காளந் தெண்முத்தின் பந்த ரின்ன
நிருமித்த வகைபோற் பெற்றுப் பாலையை நெய்த லாக்கிப்
பொருமுத்த நதிசூழ் வீழிப் பொற்படிக் காசு பெற்று. |
(இ
- ள்.) பரு முத்தம் முலையாள் பங்கன் அருளினால் - பரிய
முத்துமாலையை யணிந்த கொங்கையையுடைய உமையம்மையை ஒரு
பாதியிலுள்ள இறைவனருளினால், பசும்பொன் தாளம் - பசிய பொற்றாளமு
திருமுத்தின் சிவிகை காளம் - அழகிய முத்துச்சிவிகையும் திருச்சின்னமும்,
தெள்முத்தின் பந்தர் இன்ன - தெள்ளிய முத்துப் பந்தரும் இவைபோல்வன
பிறவும், நிருமித்தவகை போல் பெற்று - புதிதாக ஆக்கிய தன்மை போல்ப்
பெற்று, பாலையை நெய்தலாக்கி - பாலை நிலத்தை நெய்தனிலமாக்கி,
பொரு முத்தம் நதி சூழ் வீழி - கரையை மோதும் அலைகளையுடைய
முத்துக்களையுடைய காவிரிநதி சூழ்ந்த திருவீழிமிழலையில், படி பொற் காசு
பெற்று - திருப்படியிற் பொற்காசு பெற்று. திருக்கோலக்கா என்னும் பதியிற்
பொற்றாளமும், திருவரத் துறைக்குச் செல்லுகையில் மாறன் பாடியில் முத்துச்
சிவிகை முத்துக் குடை முத்துச் சின்னங்களும், திருச்சத்தி முற்றத்திலிருந்து
திருப்பட்டீச்சுரத்துக்கு எழுந்தருளுகையில் முத்துப் பந்தரும்,
திருநாவுக்கரசருடன் திருவீழி மிழலையில் எழுந்தருளியிருக்கும் பொழுது
பொற்காசும் இறைவர்பாற் பெற்றனர்; இவ்வரலாறுகளைத் திருத்தொண்டர்
புராணத்தால் விளக்கமுற அறிக. அவை உடன் தோன்றியவாற்றை வியந்து
நிருமித்த வகைபோல் என்றார்; நிருமித்தல் - படைத்தல். பாலையை
நெய்தலாக்கியது,
ழுபாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப்
பாடியதும்
காலனையன் றேவிக் கராங்கொண்ட - பாலன்
மரணந் தவிர்த்ததுவு மற்றவர்க்கு நந்தம்
கரணம்போ லல்லாமை காண்ழு
|
எனத் திருக்களிற்றுப்படியாரில்
எடுத்துப் போற்றப் பெற்றுளது.
பிள்ளையார் தமது திருத்தாயார் பிறந்த தலமாகிய திருநனிபள்ளியை முன்பு
பாலையாக்கி, பின் அதனை நெய்தலாக்கினர் என்று,
ழுகள்ளம் பொழில்நனி பள்ளி தடங்கட
மாக்கியஃதே
வெள்ளம் பணிநெய்த லாக்கிய வித்தகன் வெண்குருகுப்
புள்ளொண் டவளப் புரிசங்கொ டாலக் கயலுகளத்
தள்ளந் தடம்புனற் சண்பையர் காவலன் சம்பந்தனேழு |
என்னும் திருச்சண்பை
விருத்தத்தால் அறியப்படுகின்றது. (23)
|