மேற்கொண்டு - தெய்வத்
தன்மை பொருந்திய அழகிய
முத்துச்சிவிகையிலேறியருளி, அமண் இருள் கழுவும் சோதி யாம் என -
அமணாகிய இருளைப்போக்குஞ் சூரியனாகும் என்று கண்டோர் சொல்லு
மாறு, நெறிக்கொண்டு ஈசன் இடந்தொறும் அடைந்து பாடி - வழிக்கொண்டு
இறைவன் திருப்பதிகடோறுஞ் சென்று பாடியருளி.
காமரு,
உ சாரியை; காமம் மரு காமரு என்றாயதெனக் கொண்டு,
விருப்பம் பொருந்திய என்றுரைத்தலுமாம். முத்துச் சிவிகை முதலியவற்றின்
ஒளியும், திரு நீற்றினொளியும் விரவி மிகுதலால் அமணிருள்
கழுவுஞ்சோதியாமென என்றார் என்னலுமாம்;
ழுதுன்னுமுழு வுடற்றுகளாற் சூழுமுணர் வினிற்றுகளால்
அன்னெறியிற் சென்றடைந்த வமண்மாசு கழுவுதற்கு
மன்னியொளிர் வெண்மையினாற் றூய்மையினால் வழுதியர்தங்
கன்னிநாட் டிடைக்கங்கை யணைந்ததெனுங் கவின் காட்டழு |
என்னும் திருத்தொண்டர்
புராணச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது.
கழுவுதல் போக்குதல். (31)
செம்பிய
னாடு நீந்தித்* தென்னவ னாடு நண்ணி
வெம்பிய சுரமு முல்லைப் புறவமு மேக வில்லைத்
தும்பிகை நீட்டி வாங்கு மலைகளுந் துறந்து பாகத்
தம்பிகை யுடையான் கூட னகர்ப்புற னணுகச் செல்வார். |
(இ
- ள்.) செம்பியன் நாடு நீந்தி - சோழன் நாட்டினைக் கடந்து,
தென்னவன் நாடு நண்ணி - பாண்டியன் நாட்டினை அடைந்து, வெம்பிய
சுரமும் முல்லைப் புறவமும் - வெப்பமிக்க பாலை நிலத்தையும் முல்லை
நிலத்தையும், மேகவில்லைத் தும்பி கைநீட்டி வாங்கும் மலைகளும் துறந்து -
முகிலிலுள்ள இந்திர வில்லை யானை தனது துதிக்கையை நீட்டி வளைக்கும்
மலைகளையுங் கடந்து, பாகத்து அம்பிகை உடையான் - ஒரு பாதியில்
உமையையுடைய இறைவனது, கூடல் நகர்ப்புறன் அணுகச் செல்வார் -
கூடலம்பதியின் அண்மையிற் செல்வாராயினர்.
முல்லையாகிய
புறவம் என்க. மலைகளின் உயர்ச்சி கூறுவார்
மேகவில்லைத் தும்பிகை நீட்டி வாங்கு மலைகள் என்றார். இது
தொடர்புயர்வு நவிற்சி. (32)
புண்ணிய
நீற்றுத் தொண்டர் குழாத்தினுட் புகலி வேந்தர்
நண்ணிய சிவிகை மீது நகைவிடு தரளப் பந்தர்
கண்ணிய றோற்றந்? தீம்பாற் கடல்வயிற் றுதித்துத் தீர்ந்து
விண்ணியன் முழுவெண் டிங்கள் விளக்கமே யொத்த தன்றே. |
(இ
- ள்.) புண்ணிய நீற்றுத் தொண்டர் குழாத்தினுள் -
புண்ணியமாகிய நீற்றினை யணிந்த அடியார் கூட்டத்தினுள், புகலிவேந்தர்
நண்ணிய சிவிகை
(பா
- ம்.) * செம்பியனாடு நீங்கி. +கண்ணிய தோற்றம்.
|