மீது - காழிவேந்தர்
ஏறியருளிய சிவிகையின்மேல், நகைவிடு தரளப்பந்தர் -
ஒளி விடும் முத்துப் பந்தரின், கண் இயல் தோற்றம் - பார்த்தற்கு அமைந்த
காட்சி தீம்பால் கடல் வயிறு உதித்து - இனிய பாற்கடலின் நடுவிற்றோன்றி,
தீர்ந்துவிண் இயல் முழுவெண் திங்கள் - மேற் போந்து வானிலுலாவும்
வெள்ளிய முழு மதியினது, விளக்கமே ஒத்தது - காட்சியையே ஒத்தது.
புண்ணியமே வடிவாயது திருநீறு என்பது,
"புண்ணிய மாவது நீறு" |
என்னும் திருநீற்றுப்
பதிகத்தாலறிக. நீறு பூசிய தொண்டர் குழாம்
பாற்கடல் போன்றும், முத்துப் பந்தர் அப்பாற்கடலிலுதித்து வானிலுயர்ந்த
முழுமதிபோன்றும் விளங்கின என்க. பந்தர், போலி. அன்று, ஏ
அசைகள். (33)
தேம்படு
குமுதச் செவ்வாய்ச் சிரபுரச் செல்வர் முன்னம்
போம்பரி சனத்தார் தம்மிற் பொன்னெடுஞ் சின்ன மார்ப்போர்
தாம்பர சமய சிங்கஞ் சமணிருள் கிழியப் பானு
வாம்படி வந்தா னென்றென் றார்த்தெழு மோசை கேளா. |
(இ
- ள்.) தேம்படு குமுதச் செவ்வாய்ச் சிரபுரச் செல்வர் முன்னம் -
தேன் பொருந்திய குமுத மலர்போன்ற சிவந்த வாயினையுடைய காழிச்
செல்வருக்கு முன்னே, போம்பரிசனத்தார் தம்மில் - போகும் பரிசனங்களுள்,
பொன் நெடுஞ்சின்னம் ஆர்ப்போர் - பொன்னாலாகிய நீண்ட திருச்சின்னம்
ஊதுவோர், பரசமய சிங்கம் - எங்கள் பரசமய கோளரி, சமண் இருள்
கிழிய - சமணாகி இருள் கிழிந்தோட, பானுவாம்படி வந்தான் என்று என்று
ஆர்த்து எழும் ஓசை கோளா - சூரியன் போன்று வந்தனன் என்று
பலமுறை கூறி ஆரவாரித்து எழும் ஒலியினைக் கேட்டு.
தாம்,
அசை. கரசமய சிங்கம் - புறச் சமய வாதியாராகிய வேழங்களை
அடக்கும் சிங்கம்;
"உரைசெய்திருப்
பேர்பலவு மூதுமணிச் சின்னமெலாம்
பரசமய கோளரிவந் தானென்று பணிமாற"
என்றார் அருண்மொழித்
தேவரும். ஒலிப்பிக்க எழும் ஓசை என்க. (34)
நின்றுண்டு
திரியுங் கைய ரெதிர்வந்து நீவிர் நுங்கள்
கொன்றறஞ் சொன்ன தேவைக் கும்பிட வந்தா லிந்த
வென்றிகொள் சின்ன மென்கொல் வீறென்கொல் யாரை வென்றீர்
என்றனர் தடுத்தா ரென்று மீறிலா னடியார் தம்மை. |
(இ
- ள்.) நின்று உண்டு திரியும் கையர் - நின்ற வண்ணமே உணவு
அருந்தித் திரியுங் கீழ்மக்களாகிய சமணர்கள், எதிர் வந்து - நேரில் வந்து,
கொன்று அறஞ் சொன்ன நுங்கள் தேவை - உயிர்களைக் கொன்று அறங்
கூறிய உங்கள் தேவனை, நீவிர் கும்பிட வந்தால் - நீவிர் வணங்குதற்கு
வந்தால், இந்த வென்றி கொள் சின்னம் என் கொல் - இந்த வெற்றி
|