பொருந்திய சின்னம்
எதற்கு, வீறு என் கொல் - இறுமாப்பு எதற்கு, யாரை
வென்றீர் என்றனர் - யாவரை வென்றீ ரென்று கூறி, என்றும் ஈறு இலான்
அடியார் தம்மைத் தடுத்தார் - எஞ்ஞான்றும் அழிவில்லாத
இறைவனடியார்களைத் தடுத்தனர்.
கொன்று
அறஞ் சொன்ன - தான் கொலை புரிந்து பிறர்க்குக்
கொலை தீதென்று அறஞ் சொன்ன, கொல்லுந் தொழிலுடையான் ஓதிய
அறமும் அறமாகாது, அவனும் தேவனாகான் என இழித்துக் கூறுவாராய்
நுங்கள் கொன்றறஞ் சொன்ன தேவை என்றார். ஈண்டுக் கொல்லுதலாவது
சருவ சங்காரஞ் செய்தல்; யானை, பசு, நாகம், காமன், காலன்
முதலியோரைக் கொன்றமையுமாம்; இவற்றுள் முன்னது உயிர்களை
இளைப்பாற்றுதற்கும், பின்னது தம்மை யடைந்தார் வினை தீர்ப்பதற்கும்
என்றுணர்க. என்றனர், முற்றெச்சம். (35)
மாமத மொழுகச் செல்லுந் திண்டிறன் மத்த வேழந்
தாமரை நூலிற் கட்டத் தடைபட வற்றோ கொற்றக்
காமனை முனிந்தார் மைந்தர் கயவர்தந் தடையை நீத்துக்
கோவணி மாட மூதூ ரடைந்தரன் கோயில் புக்கார். |
(இ
- ள்.) மாமதம் ஒழுகச் செல்லும் - கரிய மதநீர் ஒழுகச் செல்லா
நிற்கும், திண்திறல் மத்த வேழம் - மிக்க வலியுடைய மதயானையானது,
தாமரை நூலில் கட்டத்தடைபட வற்றோ - தாமரை நூலினாற்கட்டுதலால்
தடை பட்டுப் போக்கொழியும் வன்மைக் குறைவுடையதோ? (இல்லை);
கொற்றக் காமனை முனிந்தார் மைந்தர் - வெற்றி பொருந்திய மதவேளை
எதித்தவரது திருமைந்தர், கயவர் தம் தடையை நீத்து - அக் கீழ்மக்களின்
தடையை நீக்கி, கோமணி மாடம் மூதூர் அடைந்து - தலைமை பெற்ற
மணிகள் அழுத்திய மாடங்களையுடைய தொன்னகராகிய மதுரையை
அடைந்து, அரன் கோயில் புக்கார் - சோமசுந்தரக் கடவுளின்
திருக்கோயிலுட் புகுந்தார்.
மத்தம்
- மதச்செருக்கு; மத்தகமும் ஆம். வற்றோ - வல்லதோ;
வன்மைக் குறைவுடையதோ என்பது கருத்தாகக் கொள்க;
ழுவெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின்
தந்துவினாற் கட்டச் சமைவ தொக்கும்ழு |
எனப் பிறரும் உவமை
கூறினமை காண்க. இறைவன் ஞானப்பாலூட்டுவித்தும்,
சிவிகை முதலியன தந்தும் பிள்ளைமை பாராட்டுதலானும், இவரும் சற்புத்திர
நெறி நின்று அம்மையப்பரையே தமக்குத் தாய் தந்தையராகப் போற்றி
யொழுகலானும் காமனை முனிந்தார் மைந்தர் என்று கூறப்படுதற்குப்
பிள்ளையார் உரிமை யுடையராதல் பெற்றாம். (36)
கைம்மலைச் சாபந் தீர்த்த கருணையங் கடலைத் தாழ்ந்து
மும்முறை வளைந்து ஞான முகிழ்முலைப் பாலி னோடு
செம்மணி வள்ளத் தீந்த திருவொடுந் தொழுதா னந்த
மெய்ம்மய வெள்ளத் தாழ்ந்து நின்றனர் வேதச் செல்வர். |
|