(இ
- ள்.) வேதச் செல்வர் - மறையாகிய செல்வத்தையுடைய
திருஞான சம்பந்தப் பெருமானார், ஞானம் - சிவஞானத்தை, முகிழ்முலைப்
பாலினோடு - தாம ரையரும்பினையொத்த திருமுலைப்பாலினோடுங்
குழைத்து, செம்மணி வள்ளத்து ஈந்த திருவொடும் - சிவந்த மணிகள் பதித்த
பொற்கிண்ணத்திற் கொடுத்தருளிய அம்மையோடும், கைம்மலைச் சாபம்
தீர்த்த கருணையங்கடலை - வெள்ளை யானையின் சாபத்தைப்
போக்கியருளிய அருட்கடலாகிய அப்பனை, மும்முறை வளைந்து தாழ்ந்து
தொழுது - மூன்று முறை வலம் வந்து வீழ்ந்து வணங்கி, மெய்ம்மய ஆனந்த
வெள்ளத்து ஆழ்ந்து நின்றனர் - உண்மை மயமாகிய சிவானந்தப்
பெருக்கிலழுந்தி நின்றனர்.
கடலைத்
தாழ்ந்து வெள்ளத்து ஆழ்ந்து நின்றனர் என்பது
சொன்னயம். (37)
மறைவழி நின்று நின்னை வந்திசெய் துய்ய மாட்டா
நிறைவழி வஞ்ச நெஞ்சச் சமணரை நெறிக ளெல்லாஞ்
சிறைபட வாது செய்யத் திருவுள்ளஞ் செய்தி கூற்றைக்
குறைபட வுதைத்தோ யென்று குறித்துரை பதிகம் பாடி. |
(இ
- ள்.) கூற்றைக் குறைபட உதைத்தோய் - கூற்றுவனை அவனுயிர்
சிதையுமாறு உதைத்தருளியவனே, மறைவழி நின்று நின்னை வந்தி செய்து
உய்யமாட்டா - வேத நெறியினின்று உன்னை வணங்கிப் பிழைக்கமாட்டாத,
நிறைவு அழிவஞ்ச நெஞ்சச் சமணரை - அறிவழிந்த வஞ்சம் நிரம்பிய
உள்ளத்தையுடைய சமணரை, நெறிகள் எல்லாம் சிறைபட - அவர்
வழிகளெல்லாம் சிறைபடுமாறு, வாது செய்யத் திருவுளம் செய்தி என்று -
வாது செய்யத் திருவுள்ளஞ் செய்யக்கடவை என்று, குறித்து உரைபதிகம்
பாடி - அதனைக் குறித்து உரைக்கும் திருப்பதிகம் பாடியருளி.
நெறிகள்
எல்லாம் சிறைபட - அவர்கள் புன்னெறி யெல்லாம் மறைந்
தொடுங்க. சமணரொடு வாது செய்யவும், அவர்களை வாதில் வென்றழிக்கவும்
இறைவர் திருக்குறிப்பினை யுணர்தல் வேண்டிப் பிள்ளையார் பாடிய பதிகம்
இரண்டு; அவை முறையே,
ழுகாட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
வேட்டு வேள்வி செயாவமண் கையரை
ஓட்டி வாது செயத்திரு வுள்ளமேழு |
ழுவேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி யமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
னால வாயி லுறையுமெம் மாதியேழு |
|