410திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



என்னும் பாடல்களை முதலாக வுடையன. இவற்றுட் பின்னது வரும்
படலத்திற் கூறப்படுதலின் ஈண்டு முதற்பதிகத்தைக் கொள்க. அடியவர்க்காக
இயமனை உதைத்தருளிய பேரருளுடையை ஆகலின் சமணரை வாதில்
வெல்ல அருள் புரிவை என விசேடியம் கருத்துடன் கூடியிருத்தலின் இது
கருத்துடை யடை கொளியணி;

ழுஆலமே யமுத மாக வுண்டுவா னவர்க் களித்துக்
காலனை மார்க்கண் டற்காக் காய்ந்தனை யடியேற்கின்று
ஞாலநின் புகழே யாக வேண்டுநான் மறைக ளேத்துஞ்
சீலமே யால வாயிற் சிவபெரு மானே யென்றார்ழு

என்னும் பெரிய புராணச் செய்யுள் இங்கே சிந்திக்கற்பாலது. (38)

வேண்டுகொண் டருளைப் பெற்று மீளுமப் போது கண்டு
மூண்டவைம் பொறியும் வென்ற வாகீச முனிக ளென்ன*
ஆண்டுளா ரொருவர் வேண்ட வவர்திரு மடத்தி லன்பு
பூண்டெழு காத லோடும் போயினார் புகலி வேந்தர்.

     (இ - ள்.) வேண்டு கொண்டு அருளைப்பெற்று மீளும் அப்போது -
வேண்டிக்கொண்டு திருவருளைப் பெற்றுத் திரும்பும் அப்பொழுது, மூண்ட
ஐம்பொறியும் வென்ற - மூளுகின்ற ஐம்பொறியும் வென்ற, வாகீச
முனிகளென்ன ஆண்டு உளார் ஒருவர்கண்டு வேண்ட - வாகீச
முனிகளென்று அங்குள்ள ஒருவர் கண்டு வேண்டி யழைக்க, அவர்
திருமடத்தில் - அவர் திருமடத்திற்கு, அன்பு பூண்டு எழு காதலோடும் -
அன்பு பூண்டு மேலெழும் விருப்பத்தோடும், புகலிவேந்தர் போயினார் -
காழியரசர் சென்றருளினார்.

     வேண்டுகொண்டு - வேண்டுதல் செய்து; வேண்டு, முதனிலைத்
தொழிற் பெயர். மூண்ட - புலன்களிற் செல்ல மூளும். வாகீச முனிகள் -
பிள்ளையார் காலத்தில் மதுரையில் திருமட மமைத்து அதில் வசித்து
அம்மையப்பரை வழிபாடு செய்து கொண்டிருந்த ஓர் சிவயோகியாராவர்;
திருநாவுக்கரசுகளைப்போல அங்குள்ள ஓர் சிவயோகியார் வேண்ட
என்றுரைப்பாருமுளர். (39)

அங்கெழுந் தருளி யெல்லி னமுதுசெய் திருப்ப வற்றைக்
கங்குல்வா யமணர் செய்யுங் கருதருஞ் செயலுந் தங்கள்
மங்கல மரபின் வந்தாள் வருத்தமுங் காண வஞ்சிச்
செங்கதி ரவன்போய் மேலைச் செழுங்கடல் வெள்ளத் தாழ்ந்தான்.

     (இ - ள்.) அங்கு எழுந்தருளி எல்லின் அமுது செய்து இருப்ப -
பிள்ளையார் அங்கு எழுந்தருளிப் பகற்கொழுதில் திருவமுது செய்து இருக்க,
அற்றைக் கங்குல்வாய் - அன்று இரவின்கண், அமணர் செய்யும் கருதரும்
செயலும் - சமணர்கள் செய்யும் நினைத்தற்கரிய செயலையும், தங்கள்


     (பா - ம்.) * முனிவரென்ன.