412திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



பழித்தழல் இழைத்தார் - முத்தமிழ் வித்தகர்மேற் பழிவேள்வி செய்தனர்.

     வைதிக மடங்கலேறு என்க. அயல்மலை இடங்கள் - ஆனைமலை
முதலிய எண் குன்றங்கள்;

"ஆனை மாமலை யாதி யாய விடங்க ளிற்பல வல்லல் சேர்
ஈனர் கட்கெளியேன லேன்றிரு வால வாயர னிற்கவே"

என்று பிள்ளையார் அருளிச்செய்தலுங்காண்க. பழித்தழல் - அபிசார வேள்வி. (42)

மெய்யில் சிந்தையா ரத்தழற் கடவுளை விளித்தாங்
கெய்தி யெம்பகை யாயினோ ரிருக்கையை யமுது
செய்து வாலெனப் பணித்தனர்* சிறுவிதி மகத்துக்
கையி ழந்தவன் செல்லுமோ வஞ்சினான் கலங்கி.

     (இ - ள்.) மெய்இல் சிந்தைார் - உண்மையில்லாத உள்ளத்தையுடைய
சமணர், அத்தழற் கடவுளை விளித்து - அத்தீக் கடவுளை அழைத்து, ஆங்கு
எய்தி - அங்குச் சென்று, எம் பகையாயினோர் இருக்கையை அமுது செய்து
வா எனப் பணித்தனர் - எமது பகைவரின் இருப்பிடத்தை உண்டு
வருவாயாகவென்று கட்டளை யிட்டனர்; சிறுவிதி மகத்தில் கை இழந்தவன் -
தக்கன் வேள்வியில் கை அறுபட்ட அவன், செல்லுமோ - செல்வானோ,
கலங்கி அஞ்சினான் - மனங்கலங்கி அஞ்சினான்.

     மெய்யில் சிந்தை - பொய் குடிகொண்ட சிந்தை. மந்திரத்தால்
அத்தீக்கடவுளை அழைத்து என்க. சிவபிரானுக்கு மாறாகத் தக்கன் புரிந்த
வேள்வியிற் சென்று கை குறைபட்டவன் சிவகுமாரராகிய திருஞான
சம்பந்தர்க்கு மாறாக அவர் இருக்கையிற் றுணிந்து செல்வனோ என அவன்
செல்லாமைக்கு ஏதுக் காட்டினர்;

"தவமறைந் தல்ல செய்வார் தங்கண்மந் திரத்தாற் செந்தீ
சிவநெறி வளர்க்க வந்தார் திருமடஞ் சேரச் செய்தார்"

"ஆதி மந்திர மஞ்செழுத் தோதுவார் நோக்கு
மாதி ரத்தினு மற்றைமந் திரவிதி வருமே
பூதி சாதனர் மடத்திற்றாம் புனைந்தசா தனைகள்
சாதி யாவகை கண்டமண் குண்டர்க டளர்ந்தார்"

என்னும் சேக்கிழார் திருவாக்குகளும் காண்க. (43)

ஈனர் தாஞ்சடத் தீயினை யெடுத்தன ரேகி
ஞான போனகர் மடத்தினிற் செருகினார் நந்தா
தான தீப்புகை யெழுவதை யடியவர் கண்டு
வான நாயகன் மைந்தருக் குணர்த்தினார் வல்லை.

     (பா - ம்.) * வாவென விடுத்தனர்.