(இ
- ள்.) அன்று கேள்வியால் அருந்திய ஞான ஆரமுதை -
அந்தணனாற் கூறப்பட்ட அன்று செவியினாற் பருகிய நிறைந்த ஞான
அமிழ்தினை, இன்று கண்களால் உண்டு - இப்பொழுது கண்களாற் பருகி,
கண் பெற்ற பேறு எய்தி - கண் பெற்ற பயனை அடைந்து, சென்று
இறைஞ்சினான் - நெருங்கிப்போய் வீழ்ந்து வணங்கினான்; பூந்தராய்
வேந்தர் - காழிமன்னர், தீ அமண் சூழ்ச்சிவென்ற சிந்தையீர் - கொடிய
அமணர்களின் சூழ்ச்சியை வென்ற சிந்தையையுடையீர், எழுந்திரும் என்றனர்
- எழுந்திருப்பீராக என்று கூறியருளினர்.
ஞான
அமுது - ஞானமே உருவமாகிய அமிழ்தம் போல்வார்;
"ஞானத்தின் றிருவுருவை நான்மறையின் றனித்துணையை
வானத்தின் மிசையன்றி மண்ணில்வளார் மதிக்கொழுந்தைத்
தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தி னெழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்" |
என்னும் அருண்மொழித்
தேவர் அமுதவாக்கு இங்கே நோக்கற்பாலது.
பூந்தராய் - சீகாழியின் பன்னிரு பெயருள்
ஒன்று. (53)
நன்றி ருந்தனி ரேயென நகைமலர்த் தடந்தார்
வென்றி மீனவன் கற்பினார் தம்மையும் வினவ
என்று நும்மரு ளுடையவர்க் கெவன்குறை யென்னா
ஒன்று கேண்மைகூட ரன்பினா ரிதனையு முறைப்பார். |
(இ
- ள்.) நன்று இருந்தனிரே என - நலமுற இருக்கின்றீரோ என்று,
நகைமலர்த் தடம்தார் - ஒளி பொருந்திய மலர்களாலாகியபெரிய
மாலையையணிந்த, வென்றி மீனவன் கற்பினார் தம்மையும் - வெற்றியை
யுடைய பாண்டியனது தேவியாகிய மங்கையர்க்கரசியாரைக் குறித்தும், வினவ
- உசாவ, நும் அருள் உடையவர்க்கு என்றும் குறை எவன் என்னா - நுமது
அருளையுடையவர்க்கு முக்காலத்தும் தீங்கு ஏது என்று கூறி, ஒன்று
கேண்மை கூர் அன்பினார் - பொருந்திய நட்பு மிகுதற் கேதுவாகிய
அன்பினையுடைய குலச்சிறையார், இதனையும் உரைப்பார் - இதனையுங்
கூறுவாராயினர்.
மங்கையர்க்கரசியாரும்
நீரும் நலமே என உடன் சேர்த்து
வினாவினரென்பார் நன்றிருந்தனிரே யென - மீனவன் கற்பினார் தம்மையும்
வினவ என்றார்; இங்ஙனம் பொருள் கூறுவதே இவ்வாசிரியர் கருத்துக்கு
இயைந்ததாகும்; மங்கையர்க்கரசியாரை நோக்கி வினவினரெனவும், அவர்
இதனையும் உரைப்பார் எனவும் பிறர் கூறும் பொருள் பொருந்தாதென்க.
"செம்பியர்
பெருமான் குலமக ளார்க்குந் திருந்திய சிந்தையீ ருமக்கும்
நம்பெரு மான்றன் றிருவருள் பெருகு நன்மைதான் வாலிதே யென்ன
வம்பல ரலங்கன் மந்திரி யாரு மண்மிசைத் தாழ்ந்தடி வணங்கித்
தம்பெருந் தவத்தின் பயனனை யார்க்குத் தன்மையா நிலையுரைக்
கின்றார்" |
|