418திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



"சென்றகா லத்தின் பழுதிலாத் திறமு மினியெதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனா லெற்றைக்குந் திருவரு ளுடையோம்
நன்றியி னெறியில ழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனு முய்ந்து
வென்றிகொ டிருநீற் றொளியினில் விளங்கு மேன்மையும் படைத்தன
                                                 மென்பார்"

என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுட்கள் ஈண்டுச் சிந்திக்கற்பாலன.
(54)

கையர் மாளவு நீற்றினாற் கவுரியன் றேயம்
உய்வ தாகவு மின்றுநும் மருளினா லொலிநீர்
வையை நாடன்மேல் வெப்புநோய் வந்ததா லதனை
ஐய தீர்த்திடல் வேண்டுமென் றடியில்வீழ்ந் திரந்தார்.

     (இ - ள்.) ஐய - ஐயனே, இன்று நும் அருளினால் - இன்று நுமது
திருவருளினால், கையர் மாளவும் - கீழ்மக்களாகிய சமணர்கள் அழியவும்,
கவுரியன் தேயம் நீற்றினால் உய்வது ஆகவும் - பாண்டியன் நாடானது
திருநீற்றினால் உய்தி பெறுதலை அடையவும், ஒலிநீர்வையை நாடன்மேல்
வெப்பு நோய் வந்தது - ஒலியினையுடைய நீர் நிறைந்த வையை நாடனாகிய
பாண்டியன் உடலில் வெப்பு நோய்வந்த டைந்தது; அதனைத்
தீர்த்திடல்வேண்டும் என்று - அப்பிணியை நீக்கியருள வேண்டுமென்று,
அடியில் வீழ்ந்து இரந்தார் - திருவடியில் வீழ்ந்து குறையிரந்தனர்.

     ஒலி நீர் வையைக்கு அடை. ஆல், அசை. (55)

இரந்த வன்பருக் கன்னதா கென்றருள் சுரந்து
பரந்த நித்தில யானமேற் பனிக்கதிர் மருமான்
சுரந்த ணிப்பலென் றேகுவா னொத்துமெய்ச் சுருதி
புரந்த ளிப்பவர் பாண்டியன் கோயிலிற் புகுவார்.

     (இ - ள்.) மெய்ச்சுருதி புரந்து அளிப்பவர் - உண்மையாகிய
மறைகளைப் பாதுகாத்தளிப்பவராகிய பிள்ளையார், இரந்த அன்பருக்கு
அன்னது ஆக என்று அருள் சுரந்து - அங்ஙனங் குறையிரந்த அன்பருக்கு
அங்ஙனமே ஆகுக என்று அருள் கூர்ந்து, பரந்த நித்திலயானமேல் - ஒளி
பரந்த முத்துச்சிவிகையிலேறி யருளி, பனிக்கதிர் - குளிர்ந்த ஒளியினை
யுடைய சந்திரன், மருமான் சுரம் தணிப் பல் என்று ஏகுவான் ஒத்து - தனது
வழித்தோன்றலாகிய பாண்டியனது வெப்பு நோயைத் தணிப்பேனென்று
கருதிப் போதல்போல, பாண்டியன் கோயிலில் புகுவார் - பாண்டியனது
மாளிகையுட் போவாராயினர்.

     ஆகென்று, அகரம் தொக்கது. ஏகுவான் தொழிற்பெயர். சுருதியைப்
பாதுகாப்பவர் என்பதனை "நான்மறையின் தனித்துணையை" என்பதனாலு
மறிக. (56)