பாண்டியன் சுரந் தீர்த்த படலம்419



வாயி லெங்கணுங் தூபமு மங்கல விளக்குந்
தோய கும்பமுங் கொடிகளுஞ் சுண்ணமுந் துவன்றச்
சேய காகள வொலிமன்னன் செவிப்புலன் சுவைப்பக்
கோயி லெய்தினா ரமணர்தங் கோளரி யனையார்.

     (இ - ள்.) வாயில் எங்கணும் - வாயில்கள் எங்கும், தூபமும் மங்கல
விளக்கும் - தூபங்களும் மங்கல விளக்குகளும், தோயகும்பமும் - நீர்
நிறைந்த குடங்களும், கொடிகளும் சுண்ணமும் துவன்ற - கொடிகளும்
சுண்ணப் பொடிகளும் நெருங்கவும், சேய காகள ஒலி - சேய்மையிலுள்ள
திருச்சின்ன ஒலியாகிய அமுதினை, மன்னன் செவிப்புலன் சுவைப்ப -
பாண்டியனது செவிப் புலனானது சுவையுடன் அருந்தவும், அமணர் தம்
கோளரி அனையார் - சமணர்களாகிய யானைகட்குச் சிங்கம் போன்ற
பிள்ளையார், கோயில் எய்தினார் - அரசனது மாளிகையை அடைந்தனர்.

     தோயம் - நீர். சேயகாகளம் - பொன்னாற் செய்தமையின்
செம்மையுடைய காகளம் என்றுமாம். (57)

காவ லோன்மருங் கிட்டதோர் கதிர்மணித் தவிசின்
மேவி னாரவா நோக்கினான் மீனவன் றெளிந்து
வாவி தாழ்செழுந் தாமரை யெனமுக மலர்ந்து
பாவி யேன்பிணி தணித்தெனைப் பணிகொண்மி னென்றான்.

     (இ - ள்.) காவலோன் மருங்கு இட்டது ஓர் கதிர்மணித் தவிசில்
மேவினார் - அரசன் பக்கத்தில் இட்டதாகிய ஒளி பொருந்திய
மணிகளழுத்திய ஒருதவி சின்கண் இருந்தனர்; அவர் நோக்கினால் மீனவன்
தெளிந்து - அவரது பார்வையினாற் பாண்டியன் தேறி, வாவிதாழ்
செழுந்தாமரை என - தடாகத்திற் றங்கிய செழுந்தாமரை மலரென,
முகமலர்ந்து - முகமலர்ச்சியுடையவனாய், பாவியேன் பிணி தணித்து -
பாவியாகிய எனது நோயைத் தணித்து, எனைப் பணிகொள்மின் என்றான் -
என்னை அடிமையாக்கிக் கொள்வீர் என்று குறையிரந்தனன்.

     அவர் மேவினார் எனவும், மீனவன் நோக்கினான் எனவும்
கூட்டியுரைத்தலுமாம். பிள்ளையாரைத் தரிசித்தமையாலும் அவரது அருள்
நோக்கத்தாலும் சிறிது பிணி தவிர்ந்து அறிவு தெளிந்தான் என்க. (58)

புலைத்தொ ழிற்குவித் தயினோர் கேட்டுளம் புழுங்கிக்
கலைத்த டங்கட னீந்திய காவலோ யுன்றன்
வலப்பு றத்துநோ யிவரையு மற்றைநோ யெமையுந்
தொலைத்தி டப்பணி யென்றனர் கைதவன் சொல்வான்.

     (இ - ள்.) புலைத்தொழிற்கு வித்தாயினோர் - கொல்லுதல் முதலிய
இழி தொழிலுக்கு விதையாயுள்ள சமணர்கள், கேட்டு உளம் புழுங்கி -
அதனைக்கேட்டு உள்ளம் வெந்து, கலைத்தடம் கடல் நீந்திய காவலோய் -


     (பா - ம்.) * துவன்றி.