(இ
- ள்.) இனையர்போல் - இந்தப் புலவர்கள்போலவே,
மறுபுலத்து இருக்கும் கேள்வி வினைஞரும் - வேற்று நாட்டிலுள்ள
நூற்கேள்வி வல்ல புலவர்களும் வந்து வந்து மதம் மேற்கொண்டு வினாய்
வினாய் வாதம் செய்து - வந்து வந்து தருக்கினை மேற்கொண்டு பலமுறை
வினாவி வாதித்து, மனவலி இளைப்ப - மனத்தின் திட்பங்கெட, வென்று -
(அவர்களை) வென்று, வைகுவோர் - தங்கி யிருக்கும் அக்கழகத்தார்,
ஒன்றை வேண்டி - ஒரு பொருளைக் கருதி, புனை இழை பாகம் நீங்காப்
புலவர்முன் நண்ணினார் - உமையம்மையை இடப்பாகத்தில் நீங்காத
புலவராகிய சோமசுந்தரக்கடவுள் திருமுன் சென்றனர். ஈண்டும் அடுக்குகள்
அப்பொருளன. நூற்கேள்வியே தொழிலாகவுடைய ரென்பார் கேள்வி
வினைஞரும் என்றார். மதம் மேற்கொண்டு என்பதற்கு உடன்படல் முதலிய
எழுவகை மதத்தினை மேற்கொண்டு என்றுரைத்தலுமாம். வினாவி என்பது
விகாரமாயிற்று. ஒன்று : பண்பாகு பெயர். புனையிழை அணியப்பட்ட
அணியினையுடையாள் : அன்மொழித்தொகை. (22)
முந்துநூன்
மொழிந்தார் தம்மை முறைமையால் வணங்கி
யெம்மை
வந்துவந் தெவரும் வாதஞ் செய்கின்றார் வரிசை யாக
அந்தமில் புலமை தூக்கி யளப்பதா* வெம்ம னோர்க்குத்
தந்தருள் செய்தி சங்கப் பலகையொன் றென்று தாழ்ந்தார். |
(இ
- ள்.) முந்துநூல்
மொழிந்தார் தம்மை - முதனூலாகிய
வேதாகமங்களை அருளிச்செய்த இறைவனை, முறைமையால் வணங்கி -
முறைப்படி வணங்கி, எம்மை வரிசையாக வந்து வந்து எவரும் வாதம்
செய்கின்றார் - எம்மோடு தொடர்ச்சியாக வந்து வந்து எவரும்
வாதிக்கின்றனர்; அந்தம் இல் புலமை தூக்கி அளப்பதா - (ஆதலால்)
முடிவில்லாத புலமையைச் சீர்தூக்கி அளக்குங் கருவியாக, எம்மனோர்க்கு
- எமக்கு, சங்கப்பலகை ஒன்று தந்தருள் செய்தி என்று தாழ்ந்தார் - ஒரு
சங்கப் பலகை அளித்தருளுவாயாக என்று வேண்டி வணங்கினார். முந்துநூல்
- தமிழ் இலக்கண முதனூலுமாம்;
"வினையி னீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்" |
என்பதுங் காண்க. வரிசையாக
- இடையறாது என்றபடி. (23)
பாடிய பாணற்
கன்று வலியவே பலகை யிட்டார்
பாடிய புலவர் வேண்டிற் பலகைதந் தருளார் கொல்லோ
பாடிய புலவ ராகும் படியொரு படிவங் கொண்டு
பாடிய புலவர் காணத் தோன்றினார் பலகை யோடும். |
(பா
- ம்.) * அளப்பதாய்
|