மறை யுரைப்பதும்,
"முத்தி தருவது நீறு" என்பதனால் வீடளிப்பதும், "இரு
மைக்குமுள்ளது நீறு" என்பதனால் போகமும், "அருத்தமதாவது நீறு"
என்பதனால் பொருளும் ஆமென்று அருளிச் செய்தமை காண்க. (63)
மெய்யி லிட்டனர்
வருடலும் வெஞ்சுரந் துறந்த
மையில் சிந்தையோர் வெகுளியிற் றணிந்தது வாசஞ்
செய்த தண்பனி நீர்விரைச் சந்தனந் திமிர்ந்தால்
எய்து தண்மைய தாயின திறைவலப் பாகம். |
(இ
- ள்.) மெய்யில் இட்டனர் வருடலும் - பாண்டியனது உடம்பில்
இட்டுத்தடவியவளவில், வெஞ்சுரம் - அக்கொடிய வெப்பு நோய், துறந்தமை
இல் சிந்தையோர் வெகுளியில் தணிந்தது - முற்றத்துறந்த குற்றமில்லாத
சிந்தை யினையுடையோர் சினம்போல விரையத் தணிந்தது; இறை வலப்பாகம்
- (ஆதலால்) அரசனது வலப்பாகம், வாசம் செய்த தண் பனிநீர் விரைச்
சந்தனம் திமிர்ந்தால் - மணம் வீசிய குளிர்ந்த பனி நீரிற் குழைத்த
மணமுடைய சந்தனத்தைப் பூசினால், எய்து தண்மையது ஆயினது -
உண்டாகும் குளிர்ச்சியை உடையதாயிற்று.
இட்டனர்,
முற்றெச்சம். வெஞ்சுரம் தணிந்தது எனக்கூட்டுக.
நற்குணங்களின் முடிவில் நின்ற துரந்தோரிடத்து ஒரோ வழி வெகுளி
யுண்டாயின் அது மெய்யுணர்வால் அப்பொழுதே அழியுமாதலின் துறந்த
மையில் சிந்தையோர் வெகுளியில் தணிந்தது என்றார்;
"குணமென்னுங் குன்றேறி நின்றார்
வெகுளி
கணமேயுங் காத்த லரிது" |
என்னும் குறளும், அதற்குப்
பரிமேலழகர் வரைந்த உரையுங் காண்க. (64)
பொழிந்த
தண்மதுத் தார்புனை பூழியர் கோனுக்
கிழிந்த செய்கையர் கைதொட வெரியிடு சுரத்தாற்
சழிந்த துன்பமுங் கவுணியர் கைதொடக் சுரந்தீர்ந்
தொழிந்த வின்பமு மிருவினை யொத்தபோ லொத்த. |
(இ
- ள்.) தண் மதுப்பொழிந்த தார்புனை பூழியர்கோனுக்கு -
தண்ணிய தேனைப் பொழியும் மாலை யணிந்த பாண்டியர் மன்னனுக்கு,
இழிந்த செய்கையர் தொட - இழிந்த தொழிலை யுடைய சமணர்கள்
கைதொட, எரிஇடு சுரத்தால் கழிந்த துன்பமும் - அனல் போலக் காந்தும்
வெப்பு நோயால் மிகுந்த துன்பமும், கவுணியர் கைதொட - பிள்ளையார்
திருக்கரந்தொடுதலால், சுரம் தீர்ந்து ஒழிந்த இன்பமும் - வெப்பு நோய்
நீங்கி ஒழிதலாகிய இன்பமு, இருவினை ஒத்தபோல் ஒத்த - இரண்டு
வினைகளுந் தம்முளொத்தன போல ஒத்தன.
தொட
- தொடுதலால். கழிந்த - மிக்க; கழி என்னும் உரியடியாக
வந்த பெயரெச்ச வினை. ஒழிந்த, பெயரெச்சம் காரணப் பொருட்டு. ஒத்த,
அன்பெறாத பலவறி சொல். துன்பமும் இன்பமும் ஒத்த என்றது அமணர்
|