அடியேங்கள் விரும்பும்
குறையினை முடிக்கக் கடவீராக என்று இரந்து
வேண்டினர்.
இனி
என்னும் இடைச் சொல் அம் பெற்று இன்னம் என்றாயது. குறை
- முடிக்கப்படும் பொருள்;
"பயக்குறை யில்லைத்தம் வாழுநாளே" |
என்னும் புறப்பாட்டடியில்
இஃது இப் பொருட்டாதல் காண்க. செயத்தக்கது -
முடிப்பது; "மறப்பதறிவிலென் கூற்றுக்களே" என்புழிப் போல் துவ்விகுதி
வியங்கோளில் வந்தது. (2)
கன்னிநா டெங்கு மிந்தக் காரமண் காடு மூடித்
துன்னின திதனை யின்னே துணித்திடல் வேண்டு மென்றார்
அன்னவ ரால வாயார் திருவுள்ள மறிவே னென்னா
உன்னிய மனத்த ராகி யொய்யெனக் கோயில் புக்கார். |
(இ
- ள்.) கன்னி நாடு எங்கும் இந்தக் கார் அமண் காடு மூடித்
துன்னினது - இக் கன்னி நாடு முற்றும் இந்தக் கரிய சமண் காடு மூடிச்
செறிந்தது; இதனை இன்னே துணித்திடல் வேண்டும் என்றார் -
இக்காட்டினை இப்பொழுதே வெட்டி யழிக்க வேண்டு மென்று கூறினர்;
அன்னவர் - அவ்வாளுடைய பிள்ளையார், ஆல வாயார் திருவுள்ளம்
அறிவேன் என்னா - திருவாலவாயுடையார் திருவுள்ளக் கிடையை
அறிவேனென்று, உன்னிய மனத்தராகி - கருதிய உள்ளத்தை யுடைய வராய்,
ஒய்யெனக் கோயில் புக்கார் - விரைந்து திருக் கோயிலுட் புகுந்தனர்.
காடு
என்றதற் கேற்பத் துணித்திடல் வேண்டும் என்றார். ஒய்யென,
விரைவுக் குறிப்பு. (3)
அவ்விரு வோருங்* கூட வடைந்துபொற் கமலம் பூத்த
திவ்விய தீர்த்தந் தோய்ந்து சேனெடுங் கண்ணி பாக
நவ்வியங் கமலச் செங்கை நாதனைத் தாழ்ந்து வேந்தன்
வெவ்விய வெப்பு நீத்தார் தொழுதிது வினவு கின்றார். |
(இ
- ள்.) அவ்விருவோரும் கூட அடைந்து - அவ்விருவரும் உடன்
வரச் சென்றருளி, பொன் கமலம் பூத்த - பொற்றாமரை மலர்ந்த, திவ்விய
தீர்த்தம் தோய்ந்து - திப்பிய தடாகத்தில் நீராடி, சேல் நெடுங் கண்ணி
பாகம் - மீன் போன்ற நீண்ட கண்களையுடைய உமையினை ஒரு
கூற்றிலுடைய, நவ்வி அம் கமலச் செங்கை நாதனை - மானை அழகிய
தாமரை போன்ற சிவந்த திருக்கரத்திலேந்திய இறைவனை, தாழ்ந்து -
பணிந்து, வேந்தன் வெவ்விய வெப்பு நீத்தார் - மன்னனது கொடிய வெப்பு
நோயை நீக்கியருளிய பிள்ளையார், தொழுது இது வினவு கின்றார் -
வணங்கி இதனை வினவுகின்றார்.
கூட
- உடன் வர. திவ்வியம் - தெய்வத்தன்மை. நீத்தார்,
வினைப்பெயர். (4)
(பா
- ம்.) * அவ்விரு பேரும்.
|