காயமே யொறுத்து நாளுங் கைதவம் பெருக நோற்கும்
பேயரை யிம்மை யோடு மறுமையும் பேறற் றாரை
நீயுரை செய்த வேத வேள்வியை நிந்தை செய்யுந்
தீயரை யொறுத்தல் செய்யத் திருவுளஞ் செய்தி யென்றார். |
(இ
- ள்.) காயமே ஒறுத்து நாளும் கைதவம் பெருக நோற்கும்
பேயரை - உடலை வருத்தி எஞ்ஞான்றும் வஞ்சகமே வளர நோற்கும்
பேய்போல்வாரும், இம்மையோடு மறுமையும் பேறு அற்றாரை - இம்மைப்
பயனையும் மறுமைப் பயனையும் இழந்தவரும், நீ உரை செய்த - நீ திருவாய்
மலர்ந்தருளிய, வேத வேள்வியை நிந்தை செய்யும் தீயரை - மறையையும்
(அதன்கட் கூறப்படும்) வேள்வியையும் நிந்தனை புரியும் தீயவருமாகிய
சமணர்களை, ஒறுத்தல் செய்யத் திருவுளம் செய்தி என்றார் - ஒறுப்பதற்குத்
திருவுளம் புரிய வேண்டு மென்று இரந்தனர்.
உடம்பினை
ஒறுத்து வஞ்சம் பெருக அவர்கள் புரியும் தவத்தின் பயன்
உடலை யொறுத்தலால் இம்மைப் பயனையும் வஞ்சம் பெருகலால் மறுமைப்
பயனையும் இழத்தலன்றிப் பிறிதில்லை என்றார். வேத வேள்வியை நிந்தை
செய்யுந் தீயர் என்ற கருத்தினை,
"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி யமணொடு தேரரை
வாதில் வென்றழி கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந் தென்
ஆல வாயி லுறையு மெம் மாதியே" |
எனப்
பிள்ளையார் பாடியருளிய திருப்பதிகத்திற் காண்க.
பதிகத்தில் தேரரையும் குறித்திருப்பது சிந்தித்தற் குரியது. (5)
வெம்மத வேழங் காய்ந்த விடையவர் விசும்பிற் சொல்வார்
எம்மனோ ராவீர் நுங்கட் கிசைந்ததே யெமக்கும் வேண்டுஞ்
சம்மத மதனால் வெல்லத் தக்கவ ராக நீரே
அம்மத முடையார் தோற்கத் தக்கவ ராக வென்றே. |
(இ
- ள்.) வெம்மத வேழம் காய்ந்த விடையவர் - கொடியமதமயக்க
முடைய யானையைக் கொன்ற இடபவூர்தியினையுடைய இறைவர், விசம்பில்
சொல்வார் - வானின்கண் அசரீரியாகக் கூறுவார், எம்மனோராவீர் - எமது
அடியார்களே, நுங்கட்கு இசைந்ததே - நுங்கள் கருத்துக்குப் பொருந்திய
தொன்றே, எமக்கும் வேண்டும் சம்மதம் - எமக்கும் வேண்டிய உடன் பாடு;
அதனால் நீரே வெல்லத்தக்கவராக - அதனால் நீங்களே வெல்லத்
தக்கவராக, அம்மத முடையார் - அந்தச் சமண் மதமுடையார், தோற்கத்
தக்கவராக என்று - தோல்வி பெறத் தக்கவராக என்று கூறியருளி.
|