செழியர் கோமகன் மூழ்கிய தீப்பிணி
கழிய மாற்றும் வலியின்றிக் கற்றிலா
மழலை வாயொரு மைந்தற்குத் தோற்றுவெம்
பழிவி ளைத்தீர் பகவன் றமர்க்கெலாம். |
(இ
- ள்.) செழியர் கோமகன் மூழ்கிய தீப்பிணி - பாண்டியர் மன்னன்
மூழ்கிய வெப்பு நோயினின்றும், கழிய மாற்றும் வலி இன்றி - நீங்குமாறு
அதனைப் போக்கும் வலியிலீராய், கற்றிலா மழலைவாய் ஒரு மைந்தற்குத்
தோற்று - கல்லாத மழலைச் சொல்லையுடைய வாயினையுடைய ஒரு
பிள்ளைக்குத் தோற்று, பகவன் தமர்க்கெலாம் வெம்பழி விளைத்தீர் -
அருகக் கடவுளின் அடியார்கட்கெல்லாம் கொடிய பழியை விளைத்தீர்.
சுற்றிலா
- ஆசிரியனிடத்து ஓதாத, கல்வி பயிலாத கற்றிலா. மைந்தன்
எனவும் மழலைவாய் மைந்தன் எனவும் கூட்டுக. பகவன் - ஈண்டு அருக
தேவன். தமர் - அடியார். (12)
சாம்ப ராடுஞ் சமயம் புகுந்துவெம்
பாம்ப ணிந்தவ னேபக வானென
வேம்ப னுங்கள் விரத நெறியெலாஞ்
சோம்ப லெய்தத் துறந்தா னிகழ்ந்தரோ. |
(இ
- ள்.) வேம்பன் - வேப்பமலர் மாலையையுடைய பாண்டியன்,
சாம்பர் ஆடும் சமயம் புகுந்து - சாம்பலைப் பூசுஞ் சமயத்திற் புகுந்து,
வெம்பாம்பு அணிந்தவனே பகவான் என - கொடிய பாம்பினை யணிந்த
சிவனே இறைவனென்று கொண்டு, உங்கள் விரத நெறிஎலாம் சோம்பல்
எய்த - உங்கள் விரதநெறி முற்றும் சோர்வடைய, இகழ்ந்து துறந்தான் -
இகழ்ந்து கைவிட்டான்.
திருநீற்றினை
இகழ்ந்துரைக்குங் கருத்தால் 'சாம்பர்' என்றார். சாம்பர்,
ஈற்றுப் போலி. பகவான் - ஆறு குணங்களை யுடையவன். பகம் -
ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும்
அறுகுணங்கள். சோம்பல் - வாடுதல், சமண் சமயத்தைத் துறந்தான் என்க.
அரோ, அசை. (13)
ஏது மக்கு நிலையினி* யென்றவப்
போது மற்றவர் தம்மைப் புறகிட
வாது செய்தற் கெழுந்தனர் வஞ்சகர்
போது மென்னத் தடுத்தனர் பூவைமார். |
(இ
- ள்.) இனி உமக்கு நிலை ஏது என்ற அப்போது - இனி
உமக்குப் பற்றுக்கோடு ஏது என்று கூறிய அப்பொழுது, அவர் தம்மைப்
புறகிட வாது செய்தற்கு - ஆளுடைய பிள்ளையாரை அவர் புறகிடுமாறு
வாது செய்தற்கு வஞ்சகர்
(பா
- ம்.) *நினைவினி. (14)
|