432திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) கன்னியில் துறவு அன்னங்கள் - மணமில்லாத கன்னிப்
பருவத்திலே துறவுபூண்ட அம்சங்களும், கணவனில் துறவின் மன்னும்
ஆரியாங்கனைகள் - நாயகனோடு கூடியிருக்கும் பொழுதே துறவில்
நிலைபெற்ற ஆரியாங்கனைகளும், நூல்வாங்கும் அக்குசைகள் என்ன -
மங்கல நாண் இழந்து துறவுபூண்ட அக்குசைகளும் என்று சொல்லப்பட்ட,
மூன்று வகைப் பெண் தவப் பள்ளிகளெல்லாம் - மூன்று வகைப் பெண்களின்
தவஞ் செய்யு மிடங்களனைத்தையும், சின்னவெண்பிறைக் கோட்டுமா
சிதைக்கவும் கண்டேம் - சிறிய வெள்ளிய பிறைபோன்ற கொம்பினையுடைய
யானை ஒன்று அழிக்கவும் கண்டோம்.

     கன்னிப்பருவத்தில் ஆசிரியனிடத்து உபதேசம் பெற்றுத் துறந்து தவம்
பூணும் பெண்கள் அம்சங்கள் எனவும், கணவனுடன் கூடி இல்லறத்திருக்குங்
காலத்து உபதேசம் பெற்றுத் தவம்பூணும் பெண்கள் ஆரியாங்கனைகள்
எனவும், மங்கலநாண் இழந்தபின் உபதேசம் பெற்றுத் துறந்து தவம்பூணும்
பெண்கள் அக்குசைகள் எனவும் வழங்கப்படுவர் என்ப. சின்ன வெண்பிறைக்
கோட்டுமா என்பது பிள்ளையாரைக் குறிப்பினுணர்த்தல் காண்க. (17)

முண்டி தஞ்செய்த தலையராய் முறுக்குறி தூங்கு
குண்டி கைத்தடங் கையராய்க் கோவணம் பிணித்த
தண்டு தாங்கிய சுவலராய்ச் சடையன்பேர் நாவிற்
கொண்ட சைத்தன ராயெங்குங் குலாவுதல் கண்டேம்.

     (இ - ள்.) முண்டிதம் செய்த தலையராய் - முண்டிதஞ் செய்த
தலையினை யுடையராய், முறுக்கு உறிதூங்கு குண்டிகைத்தடம் கையராய் -
முறுக்கிய உறியிற் றொங்குங் கமண்டலத்தை யுடைய பெரிய கையினை
யுடையராய், கோவணம் பிணித்த தண்டு தாங்கிய சுவலராய் -
கோவணங்கட்டிய கோலினைத்தாங்கிய பிடரினை யுடையராய், சடையன்
பேர் நாவில் கொண்டு அசைத்தனராய் - சிவன் பெயரை நாவிற்கொண்டு
கூறுபவராய்ப் பலர், எங்கும் குலாவுதல் கண்டேம் - எங்கும் உலாவுதலைப்
பார்த்தேம்.

     உறியிற் றொங்கும் கமண்டலம் சைவத் துறவிகட்கும் உண்டென
உணர்க;

"உறித் தாழ்ந்த கரகமும்"

என்பது கலித்தொகை. சடையன் - சிவன்; புறச் சமயத்தார் சிவபிரானை
இங்ஙனங் கூறுதல் பெரு வழக்கு. (18)

காந்து வெங்கத முடையதோர் கயந்தலை வந்து
சூழ்ந்து கொண்டுநம் மடிகண்மார் கணமெலாந் துரத்தி
ஏந்து பூஞ்சினை யலைந்திட* விரங்கிவண் டிரியப்
பாய்ந்து பிண்டியை வேரொடும் பறிக்கவுங் கண்டேம்.

     (பா - ம்.) *சினையலறிட.