சமணரைக் கழுவேற்றிய படலம்433



     (இ - ள்.) காந்து வெங்கதம் உடைய தோர் கயந்தலை வந்து -
சுடுகின்ற கொடுஞ் சினமுடைய ஒரு யானைக் கன்று வந்து, சூழ்ந்து கொண்டு
நம் அடிகண் மார் கணமெலாம் துரத்தி - வளைத்துக் கொண்டு நமது
அடிகள் மார் கூட்டங்களை யெல்லாம் துரத்தி, ஏந்து பூஞ்சினை அலைந்திட
- ஏந்திய பூங்கொத்துக்களலையவும், இரங்கி வண்டு இரிய - வண்டுகள்
ஒலித்து நீங்கவும், பாய்ந்து பிண்டியை வேரொடும் பறிக்கவும் கண்டேம் -
பாய்ந்து அசோக மரத்தினை வேரொடும் பறித்தலையும் பார்த்தேம்.

     கயந்தலை - யானைக்கன்று; இது பிள்ளையாரைக் குறிப்பின்
உணர்த்துதல் காண்க. பிண்டி அருகன் உறையுந் தருவாகலின் அதனை
வேரொடும் பறித்தல் என்பது பிள்ளையார் சமண் மதத்தை அடியுடன்
அழிப்பதைக் குறிக்கின்றது. சினை அலைதற்கும் வண்டு இரிதற்கும் பறித்தல்
காரணம்.

"மழவிடை யிளங்கண் றொன்று வந்துநங் கழகந் தன்னை
உழறிடச் சிதறி யோடி யொருவருந் தடுக்க வஞ்சி
விழவொரு புகலு மின்றி மேதினி தன்னை விட்டு
நிழலிலா மரங்க ளேறி நின்றிடக் கண்டோ மென்பார்"

என்னும் பெரியபுராணச் செய்யுள் காணற்பாலது. (19)

அந்த மூவிலை வேலினுமயின்முனைக் கழுவின்
பந்தி மீதுநீ ரேறவுங் கண்டுளம் பனிப்பச்
சந்த மார்பகஞ் சேப்பவந் தளிர்க்கரம் புடைத்துக்
கந்த வார்குழல் சோரவுங் கலுழவுங் கண்டேம்.

     (இ - ள்.) அந்தம் மூவிலை வேலினும் - இறுதியைத் தரும் மூவிலைச்
சூலங்களிலும், அயில் முனைக் கழுவின் பந்தி மீதும் - கூரிய
முனைகளையுடைய கழுமர வரிசைகளின் மேலும், நீர் ஏறவும் - நீவிர்
ஏறவும், கண்டு உளம் பனிப்ப - அதனைக் கண்டு எங்கள் உள்ளம் நடுங்க,
சந்த மார்பகம் சேப்ப - சாந்தணிந்த மார்பினிடம் சிவக்குமாறு, அம்
தளிர்க்கரம் புடைத்து - அழகிய தளிர் போன்ற கையினால் அடித்துக்
கொண்டு, கந்தவார் குழல் சோரவும் கலுழவும் கண்டேம் - மணம்
பொருந்திய நீண்ட கூந்தல் சரியவும் அழுது புலம்பவுங் கண்டேம்.

     சேப்ப - சிவப்ப. எங்கள் குழல் சோரவும் நாங்கள் மார்பகம்
புடைத்துக் கலுழவும் என்க. (20)

தள்ள ருந்திற லிந்திர சாலமோ காதி
உள்ள விஞ்சையிவ் வெல்லைவந் துதவில வொன்றுங்
கள்ள ராற்பறி பட்டவோ கனலில்வெந் தனவோ
வெள்ளங் கொண்டவோ சேமத்திற் கிடப்பவோ விளம்பீர்.

     (இ - ள்.) தள் அரும் திறல் இந்திர சாலம் மோக ஆதி உள்ள
விஞ்சை - பிறரால் நீக்குதற் கரிய வலியினையுடைய இந்திரசாலமும் மோகன
முதலாகவுள்ள