மரக்கிளைகளை வெட்டி,
நிறைய இட்டு நெட்டெரி மூட்டினார் - அக்குழி
நிறையப் போட்டுப் பெரிய நெருப்பை மூட்டினார்; தம் மாதரார் வயிற்றும்
இட்டு மூட்டினார் - அவ்வனலைத் தமது மனைவியர் வயிற்றிலும் இட்டு
மூட்டினார்.
கீட்டிசை,
கீழ்த்திசை என்பதன் மரூஉ. கோடரம் - கிளை. இவர்கள்
மூட்டும் இத்தீயானது இவர் தம் மனைவியர் வயிற்றில் சோகத்தீ மூளுவதற்குக்
காரணமாயிற்று என்பார் 'தம் மாதரார் வயிற்றுமிட்டு மூட்டினார்'
என்றார். (34)
ஞானமுண்ட முனிவர்தம்மை யெள்ளியெள்ளி நாயினும்
ஈன ரங்கி யைத்தடுத் திருப்பவெண் ணிராயிரர்
ஆனதொண்ட ருடனெழுந்து சண்பைவேந்து மரசனும்
மானனாரு மந்திரக் கிழானும் வந்து வைகினார். |
(இ
- ள்.) ஞானம் உண்ட முனிவர் தம்மை எள்ளி எள்ளி -
சிவஞானம் பருகிய முனிவராகிய ஆளுடைய பிள்ளையாரை இகழ்ந்திகழ்ந்து,
நாயினும் ஈனர் - நாயினுங் கடையராகிய அச்சமணர், அங்கியைத் தடுத்து
இருப்ப - அவ்வனலைத் தமது மந்திரத்தாற் கட்டிக் கொண்டிருக்க,
எண்ணிராயிரர் ஆன தொண்டருடன் எழுந்து - பதினாறாயிரமாகிய
தொண்டருடன் எழுந்து, சண்பை வேந்தும் அரசனும் மான் அனாரும் -
காழி வேந்தரும் பாண்டியனும் மான் போன்ற மங்கையர்க் கரசியாரும்,
மந்திரக் கிழானும் வந்து வைகினார் - குலச் சிறையாரும் வந்து தங்கினார்.
அடுக்கு
பன்மை குறித்தது. தடுத்தல் - மந்திரத்தால் தம்பனஞ்
செய்தல். (35)
உள்ளவிழ்ந்த முலைசுரந் தொழுக்குபா லருந்தியே
துள்ளியோடு கன்றுபின் றொடர்ந்துசெல்லு மானென
வெள்ளியம்ப லத்துளாடும் வேதகீதர் காதல்கூர்*
பிள்ளைபோன வாறுதம் பிராட்டியோடு மெய்தினார். |
(இ
- ள்.) உள் அவிழ்ந்த முலை சுரந்து ஒழுக்குபால் அருந்தி -
உள்ளம் நெகிழ்தலால் முலை சுரந்து சொரியும் பாலைப்பருகி, துள்ளியோடு
கன்று பின் தொடர்ந்து செல்லும் ஆன் என - துள்ளியோடுகின்ற
கன்றின்பின்னே தொடர்ந்து போகும் பசுவைப் போல, வெள்ளியம்பலத்துள்
ஆடும் வேத கீதர் - வெள்ளி மன்றுள் ஆடியருளும் சாமவேத
விருப்பினராகிய இறைவர், தம் பிராட்டியோடும் - தமது இறைவியாரோடும்,
காதல் கூர் பிள்ளை போனவாறு எய்தினார் - அன்பு மிக்க பிள்ளையார்
சென்ற வழியிற் சென்றடைந்தனர்.
அவிழ்ந்த
என்னும் பெயயரெச்சம் காரணப் பொருட்டு. பிள்ளையார்
உமையின் பாலருந்தித் துள்ளியோடு கன்றாதல் உணர்க. ஆன் தொடர்ந்து
செல்லுதல் போல எய்தினார் என்றமையின் இது தொழிலுவமை. (36)
(பா
- ம்.) *வாய்மை கூர்.
|