(இ
- ள்.) வேதம் விரிந்த நாவர் - மறைகள் விரிந்த நாவினையுடைய
பிள்ளையார், தாம் விரித்த வேதம் மெய்பொருள் வரைந்த புத்தகத்தை -
தாம் விரித்துக் கூறிய மறையின் உண்மைப் பொருள் எழுதிய திருமுறையை,
வண்கயிற்றினால் வகிர்ந்து - வளவிய கயிற்றினால் வகிர்ந்து, தாம் அருந்த
ஞான அமுது அளித்த அம்மை பேர் அகப்படத் தெரிந்த ஏடு - தாம்
அருந்துதற்கு ஞானப்பால் கொடுத்த அம்மையாரின் திருப்பெயர் கிடைக்க
விளங்கிய ஏட்டினை, எடுத்து அடுத்த தீயின் வாயில் இட்டனர் - எடுத்து
அடுத்துள்ள அனல் வாயில் இட்டனர்.
பரந்துள்ள
வேதம் பயின்ற நாவர் என்றுமாம். வேத மெய்ப்பொருள் -
வேதத்தின் சாரமாகிய தமிழ் மறை; மெய்ப்பொருள் வேதம் என மாறி
உண்மைப் பொருளையுடைய தமிழ் மறை என்றுரைத்தலுமாம். கயிற்றினால்
வகிர்தல் - கயிறு சாத்தி எடுத்தல். அம்மை பேர் முற்படப் பொருந்திய ஏடு
அகப்பட அதனை எடுத்து என்க. அம்மை பேர் அமைந்த ஏடாவது
"போகமார்த்த பூண்முலையாள்" என்னும் திருநள்ளாற்றுப் பதிகம் வரைந்த
ஏடு:
"போகமார்த்த பூண்முலையா டன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள்ளேற் றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே" |
என்பது அப்பதிகத்தின்
முற் பாட்டு. அவ்வேட்டினைத் தீயின்கண்
இடும்பொழுது பிள்ளையார் பாடிய நள்ளாற்றுப் பதிகமொன்று
முளது;
அது,
"தளிரிள வளரொளி தனதெழி றருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தந் நாமமே
மிளிரிள வளரொளி யிடிலவை பழுதிலை மெய்ம்மையே" |
என்னும்
திருப்பாட்டை முதலாக வுடையது. (39)
மறைபுலப் படுத்தநூல் வரைந்தவே டனந்தநாள்
அறைபுனற் கிடந்ததா மெனப்பசந்த தரசனும்
நிறையமைச்சு மரசியாரு நின்றபேரு மந்தணர்க்
கிறைவரைப் புகழ்ந்தளப்பி லின்பவெள்ள மூழ்கினார். |
(இ
- ள்.) மறை புலப்படுத்த நூல் வரைந்த ஏடு - வேதத்தின் மெய்ப்
பொருளை வெளிப்படுத்திய திருமுறையினின்றுங் கைக்கொண்ட அவ்வேடு,
அனந்த நாள் அறை புனல் கிடந்ததாம் எனப் பசந்தது - மிகப் பலநாள்
ஒலிக்கின்ற நீரின்கண் கிடந்ததுபோலப் பசந்தது; அரசனும் நிறை அமைச்சும்
அரசியாரும் நின்ற பேரும் - பாண்டியனும் அமைச்சிலக்கணம் நிறைந்த
குலச்சிறையாரும் மங்கையர்க்கரசியாரும் அங்கு நின்ற மற்றவரும்,
அந்தணர்க்கு இறைவரைப் புகழ்ந்து - மறைவர்க்கு மன்னராகிய
பிள்ளையாரைப் புகழ்ந்து, அளப்பில் இன்ப வெள்ளம் மூழ்கினார் -
அளவில்லாத இன்பப் பெருக்கில் மூழ்கினார்.
|