(இ
- ள்.) வென்று வீறு அடைந்தவர்க்கு - வெற்றி பெற்றுப் பெருமை
அடைந்தவருக்கு, வீறுஅழிந்து தோற்றபேர் - தோல்வியுற்றுப் பெருமை
யிழந்தவர்கள், என்றும் ஏவல் அடிமையாவது என்று இசைந்து -
எப்பொழுதும் ஏவல் புரியும் அடிமையாவதென்று உடன்பட்டு, கைதவக்
குன்றுபோலும நின்ற குண்டர் கூறலோடும் - வஞ்சமலை போலும் நின்ற
கீழ்மக்களாகிய அச்சமணர் கூறியவளவில், ஈறு இலா மன்றுள் ஆடும்
அடிகள் மைந்தர் - முடிவில்லாத பொதுவில் ஆடியருளும் இறைவனது
புதல்வராகிய பிள்ளையார், வாய் மலர்ந்து பேசுவார் - திருவாய் மலர்ந்து
கூறுவாராயினர்.
தோற்று
வீறழிந்தபேர் என மாற்றுக. பேர் என்பது வழக்கு. ஈறிலா
அடிகள் எனக் கூட்டுக. (45) அறுசீரடியாசிரிய விருத்தம்
அடியார் பீதினா றாயிரவ ருள்ளார் சிவனை யவமதித்த
கொடியார் நீவி ருமக்கேற்ற தண்ட மிதுவோ கொன்றைமதி
முடியாரருளா லுங்களைநாம் வென்றேமாயின் மூவிலைவேல்
வடிவா னிரைத்த* கழுமுனையி லிடுவே மதுவே வழக்கென்றார். |
(இ
- ள்.) அடியார் பதினாறாயிரவர் உள்ளார் - நமக்கு ஏவல் புரியும்
அடியார்கள் பதினாறாயிரவர் உள்ளார்கள் (அவரேயமையும்;) நீவிர் சிவனை
அவமதித்த கொடியார் - நீங்கள் சிவபெருமானை இகழ்ந்த கொடியவர்கள்;
உமக்கு ஏற்ற தண்டம் இதுவோ - (ஆகலின்) உமக்கியைந்த தண்டம்
இதுவன்று; கொன்றை மதி முடியார் அருளால் - கொன்றை மாலையையும்
பிறைமதியையும் அணிந்த முடியினை யுடைய இறைவரது திருவருளால், நாம்
உங்களை வென்றேமாயின் - யாம் உங்களை வென்றோமானால், மூவிலை
வேல்வடிவால் நிரைத்த கழுமுனையில் - மூன்றுதகட்டு வடிவமைந்த
சூலப்படையின் உருவத்தொடு வரிசைப் படுத்தி நட்ட கழுமுனையில்,
இடுவேம் - இடா நிற்பேம்; அதுவே வழக்கு என்றார் - அதுவே தக்க
முறையாகும் என்றனர்.
தோற்றவர்
வென்றவர்க்கு அடிமையாவதென்று சமணர் கூறினமையின்
இங்கே அடியார் பதினாறாயிரவர் உள்ளாராகலின் நுங்கள் அடிமை
வேண்டற் பாலதன்று, நுமக்கேற்ற தண்டமும் இதுவன்று எனப் பிள்ளையார்
கூறினரென்க. இவ்வாதிலே தோற்றவர் செய்வது இன்னதென்பதனை ஒட்டி
வாது செய்யவேண்டுமெனக் குலச்சிறையார் கூற, அமணர்கள் தாமே
'வாதிலழிந்தோமாகில் இவ்வரசன் கழுவேற்றுவானாக' என்றனர் எனப் பெரிய
புராணம் கூறுகின்றது;
"என்றமண்
கையர்கூற வேறுசீர்ப் புகலி வேந்தர்
நன்றது செய்வோ மென்றங் கருள்செய நணுக வந்து
வென்றிவே லமைச்ச னார்தாம் வேறினிச் செய்யு மிவ்வா
தொன்றினுந் தோற்றார் செய்வ தொட்டியே செய்வ தென்றார்" |
(பா - ம்.) *வடிவாணிரைத்த.
|