அங்கது கேட்டு நின்ற வமணரு மவர்மேற் சென்ற
பொங்கிய வெகுளி கூரப் பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே தனிவாதி லழிந்தோ மாகில்
வெங்கழு வேற்று வானிவ்வேந்தனே யென்று சொன்னார்" |
என்பன காண்க. (46)
ஊழின் வலியா லமணரதற் குடன்பட டார்க ளஃதறிந்து
சூழி யானைக் குலச்சிறையுந் தச்சர் பலரைத் தொகுவித்துக்
காழி னெடிய பழுமரத்திற் சூல வடிவாய்க் கழுநிறுவிப்
பாழி நெடிய தோள்வேந்தன் முன்னே கொடுபோய்ப்
பரப்பினார். |
(இ
- ள்.) ஊழின் வலியால் அமணர் அதற்கு உடன் பட்டார்கள் -
தீவினையின் வலியினால் சமணர் அதற்கு இசைந்தார்கள்; சூழியானைக் குலச்
சிறையும் - முக படாத்தையுடைய யானையையுடைய குலச் சிறையாரும்,
அஃது அறிந்து தச்சர் பலரைத் தொகுவித்து - அதனை யறிந்து பல
தச்சர்களைக் கூட்டி, காழின் நெடிய பழுமரத்தில் - வயிர முடைய நீண்ட
முதிர்ந்த மரங்களில், சூல வடிவாய்க் கழு நிறுவி - சூலவடிவாகக் கழுக்களை
நிறுத்தி, பாழி நெடிய தோள் வேந்தன் முன்னே கொடு போய்ப் பரப்பினார்
- வலிய நீண்டதோளையுடைய பாண்டி மன்னன் முன்னே அவற்றைக்
கொண்டு போய்ப் பரப்பினார். (47)
தேற லாதார் தமைக்காழிச் செம்ம னோக்கி யினிவம்மின்
நீறு பூசிக் கண்டிகையும் பூண்டு நிருத்த ரெழுத்தைந்தும்
ஊற வோதிப் பாசமொழித் துய்மி னென்னா வறநோக்கிக்
கூறி னார்மற் றதுகேட்டுக் குண்ட ரெரியிற் கொதித்துரைப்பார். |
(இ
- ள்.) தேறலாதார்தமை - மெய்ப்பொருளை யறியாத
அச்சமணர்களை, காழிச் செம்மல் நோக்கி - கீகாழித் தோன்றலாகிய
பிள்ளையார் பார்த்து, இனி வம்மின் - இனியேனும் இங்கு வருவீராக; நீறு
பூசிக்கண்டிகையும் பூண்டு - திரு நீறு தரித்து உருத்திராக்க மாலையையும்
அணிந்து, நிருத்தர் எழுத்து ஐந்தும் ஊற ஓதி - திருக்கூத்தருடைய
திருவைந்தெழுத்தையும் நாவிற் சுவையூற ஓதி, பாசம் ஒழித்து உய்மின்
என்னா - பாசபந்தத்தை ஒழித்துப்பிழையுங்கள் என்று, அறம் நோக்கிக்
கூறினார் - அற நெறியை நோக்கிக் கூறியருளினார்; அது கேட்டு குண்டர்
எரியில கொதித்து உரைப்பார் - அதனைக் கேட்டு அக்கீழ்மக்கள்
நெருப்பைப்போலச் சினந்துரைப்பாராயினர்.
தேறலாதார்
- தெளிவில்லாதவர்; பகைமையுடையார் என்றலுமாம். ஊற
ஓதி - பயில ஓதி என்றுமாம். (48)
முன்பு தீயில் வென்றனமே நீரில் யாதாய் முடியமென
அன்பு பேசி யெமையிணக்கி யகல நினைத்தா யல்லதைநீ
பின்பு வாது செயத்துணியும் பெற்றி யுரைத்தா யல்லைபுலால்
என்பு பூணி யடியடைந்த வேழாய் போதி யெனமறுத்தார். |
|