சமணரைக் கழுவேற்றிய படலம்451



குன்றுபோலும் கோமான் எனக் கூட்டுக. சலியாமையும் பெருமையும்
யாவராலும் அறியப்படுதலும் முதலியவற்றால் பிள்ளையார்க்கு மலை
உவமமாயிற்று. நேர்ந்து நின்று, ஒருசொல். (58)

இன்ன மறத்தா றிசைக்கின்றே நீரேன் வாளா விறக்கின்றீர்
அன்னை யனையா னெம்மிறைவ னவனுக் காளா யுய்மின்கள்
என்ன வேட சிறியாய்நீ யெவ்வா றெங்கட் கடாதமொழி
சொன்ன தென்று மானமுளார் கழுவிலேறத் தொடங்கினார்.

     (இ - ள்.) இன்னம் அறத்தாறு இசைக்கின்றேம் - இன்னமும் அறநெறி
கூறுகின்றோம்; நீர் ஏன் வாளா இறக்கின்றீர் - நீவிர் ஏன் வீணாக
இறந்துபடுகின்றீர், எம் இறைவன் அன்னை அனையான் - எமது இறைவன்
எல்லா வுயிர்கட்குந் தாய் போல்பவன், அவனுக்கு ஆளாய் உய்மின்கள்
என்ன - அவனுக்கு ஆட்பட்டுப் பிழையுங்களென்று கூறி யருள, ஏட - ஏடா,
சிறியாய் நீ - சிறியவனாகிய நீ, எங்கட்கு அடாத மொழி சொன்னது எவ்வாறு
என்று - எங்களுக்குப் பொருந்தாத மொழியைச் சொன்னது எங்ஙனமென்று,
மானம் உளார் கழுவில் ஏறத் தொடங்கினார்கள் - மானம் மிக்காராகிய
அச்சமணர்கள் தாமே கழுவில் ஏறத் தொடங்கினார்கள்.

     அறநெறி நோக்கிக் கூறுகின்றேம் என்றுமாம். மானமுளார் -
கொண்டது தவறாயினும் அதனை விடுதற் கொல்லாத தீமான முடையவர்;
ஈண்டுச் சைவமே மெய்ச் சமயமென அறிந்து வைத்தும் தமது சமயத்தை
விடமாட்டாராய் உயிர் துறக் கவுந் துணிந்தாராகலின் 'மானமுளார்
கழுவிலேறத் தொடங்கினார்கள்' என்றார். (59)

மதத்தினின் மான மிக்கார் தாங்களே வலியவேறிப்
பதைத்திட விருந்தா ரேனைப் பறிதலை யவரைச் சைவ
விதத்தினி லொழுக்கம் பூண்ட வேடத்தார் பற்றிப் பற்றிச்
சிதைத்திடர் செய்தே றிட்டார் திரிதலைக் கழுக்கோ றன்னில்.

     (இ - ள்.) மதத்தினில் மானம் மிக்கார் தாங்களே வலிய ஏறி -
தங்கள் சமயத்தில் பற்று மிக்க சமணர் சிலர் தாங்களாகவே கழுவில் வலிய
ஏறி, பதைத்திட இருந்தார் - உயிர் பதைக்க இருந்தனர்; பறிதலை
ஏனையவரை - அங்ஙனம் ஏறாத பறிக்குந் தலையினையுடை ஏனைச்
சமணரை, சைவவிதத்தினில் ஒழுக்கம்பூண்ட வேடத்தார் - சைவப்பாகு
பாட்டுள் ஒழுக்கமேற்கொண்ட திருவேடமுடையார், பற்றிப் பற்றி - பிடித்துப்
பிடித்து, சிதைத்து - இடர் செய்து, அலைத்துத் - துன்புறுத்தி, திரிதலைக்
கழுக்கோல் தன்னில் ஏறிட்டார் - மூன்று தலையையுடைய கழுமரத்தில்
ஏற்றினார்கள். (60)

வழிவழி வருமாணாக்கர் சாதற்கு வருந்தி நெஞ்சம்
அழிபவர் திருநீறிட்டா ரதுகிட்டா தயர்வா ராவின்
இழிவில்கோ மயத்தை யள்ளிப் பூசினா ரிதுவுங் கிட்டா
தொழிபவ ராவின் கன்றைத் தோளிலிட் டுயிரைப் பெற்றார்.

     (இ - ள்.) வழிவழிவரு மாணாக்கர் - வழி வழியாக வந்த
மாணாக்கர்களுள், சாதற்கு வருந்தி நெஞ்சம் அழிபவர் - சாதலுக்கு வருந்தி
உள்ளம் நைபவர், திருநீறு இட்டார் - திரு நீற்றினைத் தரித்தனர்; அது
கிட்டாது அயர்வார் - அவர்களுள் அந் நீறு கிடைக்காது வருந்துபவர்,
ஆவின் இழிவு இல் கோமயத்தை அள்ளிப் பூசினார் - பசுவினது