சமணரைக் கழுவேற்றிய படலம்453



     நேரே சென்றது - எதிர்த்துச் சென்றது. (64)

செல்லுநர் காண வோலை காவதஞ் செல்வ தப்பால்
ஒல்லையங் கொளித்த லோடும் வியந்தவ னொருங்கு கூடிக்
கொல்லையான் மேய்த்து நின்றார் சிலர்தமைக் குறித்து நீரிவ்
வெல்லையுள் விசேட முண்டோ விவண்கண்ட திசைமி னென்றார்.

     (இ - ள்.) செல்லுநர் காண - அங்ஙனம் போகின்றவர் காணுமாறு,
காவதம் செல்வது ஓலை - ஒரு காவததூரஞ் சென்றதாகிய அவ்வேடு,
அப்பால் அங்கு ஒல்லை ஒளித்தலோடும் - பின் அவ்விடத்தில் விரைந்து
மறைந்த வளவில், வியந்து - வியப்புற்று, அவண் ஒருங்கூடி - அங்கு
ஒருசேரத் திரண்டு, கொல்லை ஆன் மேய்த்து நின்றார் சிலர்தமைக் குறித்து
- முல்லைநிலப் பசுக்களை மேய்த்து நின்குஞ் சிலரை நோக்கி,
இவ்வெல்லையுள் விசேடம் உண்டோ - இந்த எல்லைக்குள் வியக்கத்தகும்
நிகழ்ச்சி ஏதேனும் உண்டோ, இவண் கண்டது நீர் இசைமின் என்றார் -
இங்குக் கண்டதை நீவிர் கூறுமின் என்று வினவினர்.

     கூடி மேய்த்து நின்றார் எனவும், நீர் இவண் கண்டது இசைமின்
எனவும் இயைக்க. விசேடம் - புதுமை. (65)

அவ்விடைச் சிறார்கள் யாங்க ளொன்றையு மறியே மென்ன
இவ்விடை விசேடங் காணல் வேண்டுமெத் திறத்து மென்னாத்
தெவ்விடை வாது செய்யத் திருவுளக் கருணை செய்த
வெவ்விடைக் கொடியி னாரைப் பாடினார் வேதநாவார்.

     (இ - ள்.) அவ்விடைச்சிறார்கள் - அந்த இடைச்சிறுவர்கள், யாங்கள்
ஒன்றையும் அறியேம் என்ன - யாங்கள் ஒரு நிகழ்ச்சியையும் அறியேம்
என்று கூற, இவ்விடை எத்திறத்தும் விசேடம் காணல் வேண்டும் என்னா -
இவ்விடத்தில் எவ்வகையாலேனும் ஒரு விசேடங் காண வேண்டுமென்று,
தெவ் இடைவாது செய்ய - பகைவராகிய சமணரிடத்து வழக்குப் புரிதற்கு,
திருவுளக் கருணை செய்த - பகைவராகிய சமணரிடத்து வழக்குப் புரிதற்கு,
திருவுளக் கருணை செய்த - திருவுளம்பற்றி அருள்செய்த, வெவ்விடைக்
கொடியினாரை - விரைந்த செலவினையுடைய இடபக் கொடியை யுயர்த்திய
சிவபெருமானை, வேதநாவார் பாடினார் - தமிழ் வேதம் பாடும்
நாவினையுடைய பிள்ளையார் திருப்பதிகம் பாடினார்.

     காணல் வேண்டும் என்னாப் பாடினார் என இயைக்க. பாடிய பதிகம்.

"வன்னியு மத்தமு மதிபொதி சடையினன்
பொன்னிய றிருவடி புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர் வழிபட வடியவர்
இன்னிசை பாடல ரேடகத் தொருவனே" (1)

"கோடுசந் தனமகில் கொண்டிழி வையைநீர்
ஏடு சென் றணைதரு மேடகத் தொருவனை
நாடுதென் புகலியுண் ஞானசம் பந்தன
பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே" (11)

என்பது. (66)