(இ
- ள்.) கச்சான அரவம் ஆர்த்த கருணை அம் கடலில் தோன்றும்
- கச்சாகிய பாம்பினைக்கட்டிய அருட்கடலிற் றோன்றிய, விச்சு ஆன ஞானம்
உண்டீர் - வீட்டிற்குக் காரணமான ஞானவாரமுதினை உண்டீரே, ஆற்றலின்
விளைவுதேறாது - நுமது ஆற்றலின் பெருமையை அறியாது, அச்சு ஆன
வலியால் நும்மை அடியேன் அளந்தனன் - தற்போத வலியினால் நும்மை
அடியேன் அளந்தேன்; இந்தத் துச்சான பிழை தீர்த்து ஆள்க என்று - இந்த
இழிவாகிய குற்றத்தை நீக்கி ஆளக் கடவீரென்று, துணர்த்தார் வேம்பன்
இறைஞ்சினான் - கொத்துக்களாகிய வேப்பமாலையை யணிந்த பாண்டியன்
வணங்கினான்.
விச்சு
- வித்து; போலி. விஞ்ஞானம், அஞ்ஞானம் என்பன முறையே
விச்சானம், அச்சானம் எனத் திரிந்தன என்னலுமாம். துச்சம் என்பதன் ஈறு
கெட்டது. ஆள்கென்று, அகரம் தொகுத்தல். (72)
அந்நெடு மேரு வாகு மாடகச் சிலையி னார்க்குப்
பொன்னெடுஞ் சிகரக் கோயின் மண்டபம் புயலைக் கீண்டு
மின்னெடு மதியஞ் சூடுங் கோபுர மேகந் தாவுங்
கன்னெடும் புரிசை வீதி யாவையுங் களிப்பக் கண்டான். |
(இ
- ள்.) அந் நெடு மேருவாகும் ஆடகச் சிலையினார்க்கு - நீண்ட
மேருவாகிய பொன் மலையை வில்லாகக் கொண்ட அக்கடவுளுக்கு, பொன்
நெடுஞ் சிகரக் கோயில் - பொன்னாலாகிய நீண்ட முடியினையுடைய
திருக்கோயிலும், மண்டபம் - திருமண்டபங்களும், புயலைக் கீண்டு மின்
நெடும் மதியம் சூடும் கோபுரம் - முகில் மண்டிலத்தைக் கிழித்து
ஒளிபொருந்திய பெரிய சந்திரனைத் தரிக்குங் கோபுரங்களும், மேகம் தாவும்
கல் நெடும்புரிசை வீதி யாவையும் - முகில் தவழும் கல்லாகிய நீண்ட
திருமதில்களும் வீதியு முதலிய அனைத்தையும், களிப்பக் கண்டான் -
கண்டோர் கண்களிப்ப ஆக்கினான்.
சிலையையுடைய
அவர்க்கு என்க. கீண்டு - கீழ்ந்து; மரூஉ. கண்டான்
- இயற்றினான். (73)
அற்றைநா ளாதி யாக வேடக மென்னு நாமம்
பெற்றதா லேட கத்தின் மேவிய பிரானைப் பாண்டிக்
கொற்றவன் சமண ரோடுங் கூடிய பாவ மெல்லாம்
பற்றறப் பூசை செய்து பாசமுங் கழியப் பெற்றான்.* |
(இ
- ள்.) அற்றை நாள் ஆதியாக - அந்நாள் முதலாக, ஏடகம்
என்னும் நாமம் பெற்றது - (அப்பதி) திருவேடகம் என்னுந் திருப்பெயரைப்
பெற்றது; ஏடகத்தில் மேவிய பிரானை - அத்திருவேடகத்தில் எழுந்தருளிய
இறைவனை, பாண்டிக் கொற்றவன் - பாண்டி மன்னன், சமணரோடும் கூடிய
பாவம் எல்லாம் பற்று அற - சமணரோடும் சேர்ந்ததனா லாகிய
பாவங்களனைத்தும் பசையற (சிறிது மில்லையாக), பூசை செய்து - பூசித்து,
பாசமும் கழியப் பெற்றான் - மும்மலமாகிய பாசமும் நீங்கப் பெற்றான்.
(பா
- ம்.) *கழியப்பட்டான்.
|