(இ
- ள்.) வடபுலத்து உள்ள ஈசன் பதிகளும் வணங்கிப் பாடக்
கடவம் என்று எழுந்து - வடநாட்டிலுள்ள இறைவன் திருப்பதிகளையும்
வணங்கிப் பாடக் கடவேமென்று கருதி எழுந்து, கூடல் கண்நுதல் பெருமான்
தன்னை - கூடலில் எழுந்தருளிய நெற்றிக் கண்ணையுடைய பெருமானையும்,
இடன் உறை கயற்கணாளை இறைஞ்சி - அவனிடப்பாகத்தி லுறையும்
அங்கயற்கண்ணம்மையையும் வணங்கி, பல்வரனும் பெற்று - பல
வரங்களையும் பெற்று, விடைகொடு - விடை பெற்று, தமிழ் நாடு எங்கும்
பணிந்தனர் மீண்டு போவார் - தமிழ் நாட்டிலுள்ள பதிகளனைத்தையும்
பணிந்து மீண்டு செல்வாராயினர்.
பெருமான்
றன்னையும் கயற்கணாளையும் என எண்ணும்மை விரிக்க.
பணிந்தனர், முற்றெச்சம். (77)
தன்பெருங் கற்பி னாளு மமைச்சனுந் தமிழ்நர் கோனும்
பின்புமு னந்தண் காழிப் பிரானடி பிரிவாற் றாராய்
அன்புதந் தவர்பா னட்ட வன்றுதொட் டானாக் கேண்மை
இன்பமுந் துன்ப மாகி விளைந்துமுன் னீர்ப்பப் போனார். |
(இ
- ள்.) தமிழ்நர்கோனும் தன்பெருங் கற்பினாளும் அமைச்சனும் -
பாண்டியனும் அவனது பெருங் கற்பினராகிய மங்கையர்க்கரசியாரும்
குலச்சிறையாரும், முன் அந்தண் காழிப் பிரான் பின்பு அடிபிரிவு ஆற்றாராய்
- முன்னே செல்லும் அழகிய குளிர்ந்த சீகாழித் தலைவராகிய பிள்ளையார்
பின்னே அவர் திருவடியின் பிரிவினைப் பெறாதவராகி, அவர்பால் தந்து
நட்ட அன்றுதொட்டு - அவரிடத்தி லன்பு செய்து நட்ட அன்றுமுதல்,
ஆனாக் கேண்மை இன்பமும் - நீங்காத கேண்மையாலாகிய இன்பமும்,
துன்பமாகி விளைந்து முன் ஈர்ப்பப் போனார் - துன்பமாக விளைந்து
முன்னின் றிழுக்கச் சென்றனர். தமிழ்நர்கோன் - தமிழ் நாட்டினர்க்குத்
தலைவன். ஈர்ப்பப் பின்பு போனார் என்றியையும். பெரியார் கேண்மை
பிரிவின்கட் பீழை தருவதாகலின் 'துன்பமாகி விளைந்து' என்றார். (78)
சண்பையர் தலைவர் தாமு மனையராய்த் தம்பின் செல்லும்
நண்புடை யவரை நோக்கி நம்மிடத் தன்பு நீங்காப்
பண்பின ராகி நீறு பாதுகாத் தீசன் கீர்த்தி
மண்பட வாழ்மி னீது மறுக்கன்மீ னின்மி னென்றார். |
(இ
- ள்.) சண்பையர் தலைவர் தாமும் அனையராய் - காழியர்
பெருமான் தாமும் அத்தன்மை யுடையோராய், தம்பின் செல்லும் நண்புடை
யவரை நோக்கி - தமது பின்னே வரும் கேண்மையுடைய அவர்களைப்
பார்த்து, நம்மிடத்து அன்பு நீங்காப் பண்பினராகி - நம்மிடத்தில் அன்பு
நீங்காத குணமுடையவராய், நீறு பாதுகாத்து - திருநீற்றினைப் பாதுகாத்து,
ஈசன் கீர்த்தி மண்பட வாழ்மின் - இறைவன் புகழ் நிலவுலக முற்றும்
வளர்ந்து பரவுமாறு வாழுங்கள், ஈது மறுக்கன்மின் நின்மின் என்றார் -
இதனை மறுக்காமல் நில்லுங்கள் என்று கூறியருளினார்.
அனையராய்
- அவர்போல் வருந்தினவராய்; அனையராய்த் தம்பின்
செல்லும் நண்புடையவரை என்றியைத்துரைத்தலுமாம். பட - உண்டாக;
பரக்க (79)
|