ஆளுடைப் புகலி வேந்த ரருண்மொழி மறுக்க வஞ்சித்
தாளுடைப் பதுமச் செந்தா டலையுறப் பணிந்து மீண்டு
வாளுடைத் தானைத் தென்னன் மதுரையில் வந்தான் கஞ்சத்
தோளுடைச் சிங்க மன்னார் சோழர்கோ னாடு புக்கார். |
(இ
- ள்.) ஆளுடைப் புகலி வேந்தர் - தம்மை ஆளாகவுடைய காழி
வேந்தரின், அருள் மொழி மறுக்க அஞ்சி - அருள் நிரம்பிய மொழியினை
மறுப்பதற்கு அஞ்சி, தாள் உடைப் பதுமச் செந்தாள் தலையுறப் பணிந்து -
தண்டையுடைய தாமரை மலர்போன்ற சிவந்த திருவடிகள் தலையிற்
பொருந்துமாறு வணங்கி, வாள் உடைத் தானைத் தென்னன் மீண்டு
மதுரையில் வந்தான் - வாட்படை ஏந்திய தானையை யுடைய பாண்டியன்
திரும்பி மதுரைப் பதியை யடைந்தான்; கஞ்சத் தோள் உடைச் சிங்கம்
அன்னார் - தாமரை மாலையை யணிந்த தோளையுடைய சிங்கம்
போல்வாராகிய பிள்ளையார், சோழர்கோன் நாடு புக்கார் - சோழர்
மன்னனது நாட்டினுட் புகுந்தனர்.
ஆளுடைப்
புகலிவேந்தர் - ஆளுடைய பிள்ளையார்
என்றுரைத்தலுமாம். அருள் மொழி - ஆணை, தோளையுடையதொரு
சிங்கம்போல்வார் எனக்கொண்டு இல்பொருளுவமை யாக்கலுமாம். (80)
ஞானமா மதநீர் சோர ஞானசம் பந்த ரென்னும்
மானமா யானை வந்து கடம்பமா வனத்திற் றுன்னும்
ஊனமாஞ் சமண ரென்னுந் தருக்களை யொடித்து வெண்ணீ
றானமாப் பூழி யள்ளித் தூற்றிய தவனி யெங்கும். |
(இ
- ள்.) ஞானமாம் மதநீர் சோர - ஞானமாகிய மதநீர் ஒழுக,
ஞானசம்பந்தர் என்னும் மானம் மாயானை வந்து - ஞானசம்பந்தராகிய
சிறந்த பெரிய யானை சமணர் என்னும் தருக்களை ஒடித்து - குற்றமுடைய
சமணராகிய மரங்களை ஒடித்து, வெண்ணீறு ஆன மாப் பூழி அள்ளி -
திருநீறாகிய சிறந்த பூழியை வாரி, அவனி யெங்கும் தூற்றியது -
உலகமுற்றும் தூற்றியது.
புவி
முழுதும் திருநீறு விளங்கச் செய்தன ரென்பார் 'வெண்ணீறான
பூழி யள்ளித் தூற்றிய தவனி யெங்கும்' என்றார். இது மிகை குறையின்றி
வந்த ஒற்றுமை யுருவகவணி. (81)
[கலிநிலைத்துறை]
|
ஆதி யாலயத்
தடலைகொண் டாழிசூழ் காழிச்
சோதி வேதியர் பாண்டியன் சுரந்தணித் துடலிற்
பேதி யாதகூ னிமிர்த்தலாற் பிறங்குகற் பாதிப்
பூதி யாவினுஞ் சிறந்ததவ் வட்டில்வாய்ப் பூதி. |
(இ
- ள்.) ஆதி ஆலயத்து அடலை கொண்டு - முதற்கடவுளாகிய
சோமசுந்தரப் பெருமான் திருக்கோயிற் சாம்பலினால், ஆழிசூழ் காழிச்சோதி
வேதியர் - கடல் சூழ்ந்த காழியில் அவதரித்த புகழொளியினையுடைய
மறையவராகிய பிள்ளையார், பாண்டியன் சுரந்தணிந்து - பாண்டியன் வெப்பு
நோயை நீக்கி, உடலில் பேதியாத கூன் நிமிர்த்தலால் - உடலில் மாறுபடாத
|