தன்னருண்
மாமன் றுஞ்சினான் கூடத் தாரமுந் துஞ்சிய திப்பால்
அன்னவற் களவின் றாகிய தனமுண் டவனனி நாண்மக வின்றிப்
பின்னொரு பெண்ணைப் பெற்றன னவளைத் தனக்கெனப் பேசினா
னனைய
கன்னியை மணந்து செல்கென முடங்கற் கழறிய பாசுரந் தெரியா. |
(இ
- ள்.) தன் அருள் மாமன் துஞ்சினான் - நினது கருணையை
யுடைய மாமன் இறந்தனன்; கூடத் தாரமும் துஞ்சியது. அவனுடன் அவன்
மனைவியும் இறந்தனள்; இப்பால் - பின், அன்னவற்கு அளவு இன்றாகிய
தனம் உண்டு - அவனுக்கு அளவில்லாத நிதியம் உண்டு; அவன் நனிநாள்
மகவு இன்றி - அவன் நெடுநாள் காறும் மகப்பேறில்லாதவனாய், பின் ஒரு
பெண்ணைப் பெற்றனன் - பின் ஒரு பெண் மகவினைப் பெற்றெடுத்தான்;
அவளைத் தனக்கெனப் பேசினான் - அவளை உனக்கு மணஞ் செய்து
கொடுப்பதாகச் சொன்னான் (ஆதலின்), அனைய கன்னியை மணந்து செல்க
என - அந்தப் பெண்ணை மணஞ் செய்து கொண்டு செல்லக்கடவா யென்று,
முடங்கல் கழறிய பாசுரம் தெரியா - ஓலையிற் கூறியுள்ள வாசகத்தைத்
தெரிந்து.
தன்,
தனக்கு என்பன முன்னிலையில் வந்தமையால் இடவழுவமைதி.
தாரம் என்பது சொல்லால் அஃறிணையெனக் கொண்டு 'துஞ்சியது' என
அஃறிணைவினை கொடுத்தார். இப்பால் - இனிக் கூறத்தகுவன என்றபடி.
பேசினான் - கிளைஞர் பலரோடும் சொல்லினான். செல்கென, அகரம்
தொக்கது. முடங்கல் கழறிய என்று பாட மிருப்பின் ஓலை கூறிய
என்றுரைக்க. பாசுரம் - ஈண்டு வாசகம். (5)
வீழ்ந்தனன்
றரைமேற் புரண்டன னுயிர்ப்பு வீங்கினன் விழிப்புனல் வெள்ளத்
தாழ்ந்தனன் விம்முற்றம்மவோ வென்றென் றரற்றினன் கிளைஞர்
நட்படைந்து
வாழந்தவர் தழுவத் தழீஇத்தழீஇக் கரைந்தான் மற்றவர் தேற்றிடத் தெளிந்து
சூழ்ந்தவெந் துயர்நீத் தொருதலை மாமன் றொன்னகர்க் கேகுவான்
றுணிந்தான்.
|
(இ
- ள்.) தரைமேல் வீழ்ந்தனன் புரண்டனன் - தரையில் வீழ்ந்து
புரண்டு, உயிர்ப்பு வீங்கினன் - பெருமூச்செறிந்து, விழிப்புனல் வெள்ளத்து
ஆழ்ந்தனன் - கண்களிலிருந்து வரும் நீர்ப்பெருக்கி லழுந்தி, விம்முற்று
அம்மவோ என்று அரற்றினன் - விம்மி அம்மவோ வென்று புலம்பினன்;
கிளைஞர் நட்பு அடைந்து வாழ்ந்தவர் - சுற்றத்தாரும் நட்பினைப் பெற்று
வாழ்கின்றவரும் வந்து, தழுவத் தழீஇத் தழீஇக் கரைந்தனன் - தழுவ
எதிராகத் தானும் தழுவித்தழுவி அழுது, மற்றவர் தேற்றிடத் தெளிந்து -
அவர்கள் தேற்றத் தெளிந்து, சூழ்ந்த வெந்துயர் நீத்து - சூழ்ந்த கொடிய
துயரினைத் துறந்து, மாமன் தொல்நகர்க்கு ஏகுவான் ஒருதலை துணிந்தான் -
மாமனுடைய பழம்பதிக்குச் செல்ல ஒருதலையாகத் துணிந்தனன்.
வீழ்ந்தனன்
முதலிய வினைமுற்று நான்கனையும் எச்சமாக்குக. அம்ம,
ஓ என்பன புலம்பலில் வந்த இடைச்சொற்கள். (6)
அங்குள கிளைஞர்
சிலரொடுங் கூடி யருங்கடி மதுரைநீத் தேகிப்
பொங்கிருங் கழிசூழ் பட்டினங் குறுகிப் புகுதுவான் வரவறிந் தங்குத்
தங்குதங் கிளைஞர் வினவநேர் வாரைத் தழீஇத் தழீஇச் செலவிடுத்
தேகிக்
கொங்கிவர் தளவத் தாரினான் மாமன் கோயில்புக் கிருந்தன னாக. |
|