பங்கய மலர்க் கொம்பு
அன்னாள் - உடன்வந்த தாமரைமலரையுடைய
கொம்புபோல்வாள், சிங்க ஏறு அனையான் ஆகம் தீண்டிடாது - ஆண்
சிங்கம்போல்வனாகிய அவ்வணிகன் உடலைத் தீண்டாது, புறம்பு ஒதுங்கிப்
பாவைபோல் நின்றாள் - ஒருபுறமாக ஒதுங்கிப் பாவைபோல் நின்றனள்.
பங்கய
மலர்க் கொம்பன்னாள், இல்பொருளுவமை. செயலற்று
அசையாது நின்றாள் என்பார் 'பாவைபோற் புறம்பு நின்றாள்' என்றார். (12)
[கலிநிலைத்துறை]
|
ஆளியே றன்னவ
னரவின்வாய்ப் பட்டது மவிந்ததும்
மீளிவே லுண்கணார் கைகுலைத் தழுவதும் விழுவதுங்
கேளிர்சூழ்ந் தயர்வது மழுவதுங் கண்டிளங் கிளியானாள்
வாளியே றுண்டதோர் மயிலின்வீழ்ந் துயங்கினாண் மயங்கினாள். |
(இ
- ள்.) ஆளி ஏறு அன்னவன் - ஆளியேற்றினை யொத்த
வணிகன், அரவின் வாய்ப் பட்டதும் அவிந்ததும் - பாம்பின் வாய்ப்
பட்டதையும் இறந்ததையும், மீளிவேல் உண்கணார் - பெருமை பொருந்திய
வேல்போன்ற மையுண்ட கண்களையுடைய மகளிர், கைகுலைத்து அழுவதும்
விழுவதும் - கைநெரித்து அழுவதையும் விழுவதையும், கேளிர் சூழ்ந்து
அயர்வதும் சோர்வதும் - சுற்றத்தார் சூழ்ந்து அயர்வதையும் சோர்வதையும்,
இளம்கிளி அனாள்கண்டு - இளங்கிளிபோன்ற அவ்வணிக மகள் பார்த்து,
வாளி ஏறுண்டது ஓர் மயிலின் வீழ்ந்து உயங்கினாள் மயங்கினாள் - அம்பு
பாயப்பெற்றதாகிய ஒரு மயிலைப்போல வீழ்ந்து சோர்ந்து மயங்கினாள்.
அரவின்
வாய்ப்பட்டது - பாம்பாற் கடிக்கப்பட்டது. உண்கணார் -
சேடியர். (13)
வடிக்கணுட் செருகின வருகின வுயிர்ப்பழல் வாய்ப்படுந்
தொடுத்தபூங் கோதைபோற் சோர்ந்ததா கங்கரஞ் சோர்ந்தன
அடித்தளிர் சோர்ந்தன கன்னியன் னப்பெடை யன்னவள்
இடிக்கெதிர்ப் பட்டுவீழ்ந் தாளெனக் கிடந்தன ளென்செய்வாள். |
(இ
- ள்.) வடிக்கண் உள் செருகின - மாவடுப்போன்ற கண்கள்
உள்ளே செருகின; உயிர்ப்பு அருகின - மூச்சுகள் குறைந்தன;
அழல்வாய்ப்படும் தொடுத்த பூங்கோதைபோல் - நெருப்பின்வாய்ப்பட்ட
கட்டிய பூமாலைபோல, ஆகம் சோர்ந்தது - உடல் வாடியது, கரம்
சோர்ந்தன - கைகள் சோர்ந்தன, அடித்தளிர் சோர்ந்தன - அடியாகிய
தளிர்கள் வாடின; கன்னி அன்னப்பெடை அன்னவள் - இளமைபொருந்திய
அன்னப்பேட்டினை யொத்த அவ்வணிகமாது, இடிக்கு எதிர்ப்பட்டு
வீழ்ந்தாள் எனக்கிடந்தனள் - இடிக்கு எதிர்ப்பட்டு வீழ்ந்தவளைப்போல
வீழ்ந்து கிடந்தனள்; என் செய்வாள் - வேறு என் செய்வாள்.
அன்னப்பெடை
யன்னவளாகிய கன்னி என்றுமாம்.
(பா
- ம். *அருகிய துயிர்ப்பு. (14)
|