(இ
- ள்.) பொன்னாட்டின் மடவாரைப் புணர்வதற்கோ -
பொன்னாட்டிலுள்ள மகளிரைக் கூடுவதற்கோ (அன்றி), நம்
அளகாபுரத்துவேந்தன் - நமது அளகாபுரத்து அரசனாகிய குபேரனது, நல்
நாட்டின் மடவாரை மணப்பதற்கோ - நல்ல நாட்டிலுள்ள பெண்களை
மணம்புரிவதற்கோ (அன்றி), உனைக்கடித்த நாகர் வேந்தன் தன் நாட்டின் -
உன்னைக் கடித்த பாம்புகளின் வேந்தனாகிய அனந்தனது நாட்டிலுள்ள,
மடவாரைத் தழுவுதற்கோ - மாதர்களைக் கூடுவதற்கோ, என் ஆவித்தலைவா
- எனது உயிர்த்தலைவனே, என்னை இந்நாட்டில் இருத்தி எனை வஞ்சித்துப்
போயினவாறு என்னே என்னே - என்னை இந்த நாட்டிலேயே இருத்தி
என்னை வஞ்சித்துப் போன காரணம் என்னே என்னே!
பொன்னாட்டு
அரமகளிர் இன்பமும், அளகைவாழும் இயக்க மகளிர்
இன்பமும், நாக நாட்டு நாக மகளிர் இன்பமும் புவிமகளிர் இன்பத்தினும்
சிறந்ததென்னுங் கருத்தால் ஏகினையோ என்பாள் இங்ஙனம் கூறினாள்.
தனவணிகர் நிதிக்கிழவன் வழியினர் என்னுங் கருத்தால் 'நம்மளகாபுரத்து
வேந்தன்' என்றாள் என்க. (20)
தென்னுலகிற்
புகுந்தனையோ பணிந்தனையோ மாதுலனைத்
தேவி யோடும்
தன்னிருதோ ளுறவாரத் தழுவினனோ நானுமுடன் சார்ந்தே
னாகில்
என்னுரிய குரவரையுங் கண்ணாரக் காணேனே வெனை+ யீங்
கிட்டாய்
பின்னுரிய பரிசனமுங் +கைவிட்டாய் ுதனிப்போயென் பெற்றா
யையா. |
(இ
- ள்.) தென்னுலகில் புகுந்தனையோ - பிதிரருலகத்துப்
புகுந்தனையோ, மாதுலனைத் தேவியோடும் பணிந்தனையோ - உன்
மாமனையும் மாமியையும் வணங்கினையோ, தன் இருதோள் உற ஆரத்
தழுவினனோ, நானும் உடன் சார்ந்தேனாகில் - யானும் உடன்
வந்திருப்பேனாயின், என் உரியகுரவரையும் கண்ணாரக் காணேனோ -
எனது உரிய குரவ ரிருவரையும் கண்களிக்கக் காணேனோ, எனை இங்கு
இட்டாய் - என்னை இங்கு கைவிட்டனை, தனிப்போய் என் பெற்றாய் ஐயா
- தனியே சென்று என்ன பயனைப் பெற்றாய் ஐயனே?
குரவர்
- தந்தை தாயர். (21)
வரிசைமரு மகனரவால் விளிந்ததுநா னறைபோய மனத்தோ டிங்குப்
பரிவுறலு மெனைப்பயந்தார் நோற்றதவ நன்றாகப் பலித்த தேயோ
பெரிதவரிக் *கட்கலங்கங் காணாமு னிறந்தன்றோ பிழைத்தா ரந்தோ
அரியதிலு மரியபய னிதுவன்றோ வெவர்பெற்றா ரவர்போ லம்மா. |
(இ
- ள்.) வரிசை மருமகன் அரவால் விளிந்ததும் - சிறந்த மருமகன்
பாம்பினால் இறந்து பட்டதையும், நான் அறைபோய மனத்தோடு இங்குப்
பரிவுறலும் - நான் உள்ளீடற்ற உள்ளத்துடன் இங்கிருந்து துன்புறுவதையும்
(நோக்கின்), எனைப் பயந்தார் நோற்ற பயன் நன்றாகப் பலித்தது -
என்னைப் பெற்றவர் தவஞ்செய்த பயன் நன்றாகப் பலித்தது; அவர் -
அத்தாய் தந்தையர், பெரிது இக் கண்கலக்கம் காணமுன் இறந்து அன்றோ
பிழைத்தார் - பெரிதாகிய இந்தக் கண் கலக்கத்தைக் காணுதற்கு
முன்னரேயே
(பா
- ம்) +ஈங்கிட்டு. +கைவிட்டு. ுதனிபோய்.
(பா
- ம்.) *கண்கலக்கம்.
|