(இ
- ள்.) மருளுமாறும் - மயங்குமாறும், மயக்கு அற வான் பொருள்
தெருளுமாறும் - அம்மயக்கம் நீங்க உண்மைப் பொருள் தெளியுமாறும்,
செயவல்ல கள்வர் - செய்தற்கு வல்ல கள்வரும், சொல் பொருளும் ஆம்
மதுரேசர் - சொல்லும் பொருளுமாம் மதுரேசரு மாகிய சோமசுந்தரக் கடவுள்,
புலவர் முன் அருளும் நாவலராய் வந்து தோன்றினார் - அப்புலவர்கள் முன்
அருளுகின்ற ஒரு புலவராய் வந்து தோன்றினார்.
இறைவர்
சொல்லும் பொருளுமாதலை,
ழுசொல்லை நம்பி
பொருளாய் நின்ற நம்பிழு |
என நம்பியாரூரர் தேவாரத்துள்
ஓதுதலான் அறிக.
வந்த நாவலர்
வந்திக்கு நாவலர்
சிந்தை யாகுலஞ் செய்ய மயக்குறும்
பந்த யாப்பைக் கொணர்கெனப் பாவலர்
எந்தை யீங்கிவை யென்றுமுன் னிட்டனர். |
(இ
- ள்.) வந்த நாவலர் - அங்ஙனம் வந்த நாவலராகிய இறைவர்,
வந்திக்கும் நாவலர் சிந்தை ஆகுலம் செய்ய மயக்குறும் - தம்மை வணங்கும்
புலவர்களின் மனம் வருந்த மயக்கும், பந்த யாப்பைக் கொணர்க என -
தளையமைந்த செய்யுட்களைக்கொண்டு வருவீராக என்று கட்டளையிட,
பாவலர் - அப்புலவர்கள், எந்தை - எம்தந்தையே; ஈங்கு இவை என்று முன்
இட்டனர் - இங்குள இவையே என்று அவற்றைக்கொண்டு வந்து திருமுன்
வைத்தனர்.
பந்தம்
தளை. யாப்பு - செய்யுள் என்னும் பொருட்டு. கொணர் கென :
அகரந்தொகுத்தல். (34)
தூய சொல்லும்
பொருளின் றொடர்ச்சியும்
ஆய நாவல ரவ்வவர் தம்முது
வாய பாடல் வகைதெரிந் தவ்வவர்க்
கேய வேயெடுத் தீந்தன ரென்பவே. |
(இ
- ள்.) தூய சொல்லும் பொருளின் தொடர்ச்சியும் ஆய நாவலர்
- தூய சொல்லும் தொடர்ந்த பொருளுமாகிய அந்நாவலர் பெருமான்,
அவ்வவர்தம் முதுவாயபாடல் - அவ்வப்புலவர்களின் பொருள் முதிர்ச்சி
வாய்ந்த பாடல்களின், வகை தெரிந்து - வேறுபாடுகளை அறிந்து,
அவ்வவர்க்கு ஏயவே - அவ்வவர்க்கு மனம் பொருந்துமாறு, எடுத்து ஈந்தனர்
- எடுத்து அளித்தனர்.
பொருளின்
றொடர்ச்சி என்பதனைத் தொடர்ந்த பொருள் என மாறுக.
சொல்லும் பொருளுமாம் என்பதற்கு மேல் எடுத்துக்காட்டினமை காண்க.
இதற்குச் சொல்லின் தொடர்ச்சியும் பொருளின் றொடர்ச்சியும் ஆராய
|