இறந்தன்றோ தப்பினர்;
அந்தோ - ஐயோ, இது அன்றோ அரியதிலும்
அரியபயன் - இதுவல்லவா அரிதினும் அரிதான பயன்; அவர் போல் எவர்
பெற்றார் - அவர் பெற்றது போல வேறுயார் பெற்றனர்.
வரிசை
மருமகன் - பாராட்டிற்குரிய மருமகன். அறைபோய மனம் -
அறிவின்றிப் புரைபட்ட மனம்; தானும் உயிர் துறவாது இருத்தற்கு நொந்து
நான் அறை போய மனத்தோடிங்குப் பரிவுறலும் என்றாள், நோக்கின் என
ஒரு சொல் விரித்துரைக்க. பிழைத்தார் - துன்பத்தினின்றும் தப்பினார்,
நோற்ற பயன் நன்றாகப் பலித்தது, என்பதும், அரியதிலுமரியபயன் இது
என்பதும், எவர் பெற்றார் அவர்போல் என்பதும் குறிப்பினால்
எதிர்மறைப்பொருள் பயப்பன. அந்தோ, அம்மா என்பன இரக்கப் பொருளில்
வந்த இடைச் சொற்கள். (22)
உன்காதன் மாமனெனைப் பயந்தவன்றே யுறவறிய வுனக்கே பேசிப்
பின்காதன் மனைவியொடு முயிரிழந்தான் யானுமந்தப் பெற்றி யாலே
என்காத லுயிர்போக வெற்றுடம்போ விருக்குமுட னிறப்பே னென்னாத்
தன்காதற் றுணையிழந்த வன்றிலென விருந்தழுதா டமிய ளானாள். |
(இ
- ள்.) உன் காதல் மாமன் எனைப் பயந்த அன்றே - உனது
அன்புள்ள மாமன் என்னைப் பெற்ற காலத்திலேயே, உறவு அறிய உனக்கே
பேசி - சுற்றத்தாரறிய உனக்கே மணஞ் செய்து கொடுப்பதாகப் பேசி, பின்
காதல் மனைவியொடும் உயிர் இழந்தான் - பின்பு தன் அன்புள்ள
மனைவியொடும் உயிர் நீத்தனன்; யானும் அந்தப் பெற்றியாலே - யானும்
அந்தத் தன்மையினாலே, உடன் இறப்பேன் - நின்னுடன் இறப்பேனாவேன்;
என் காதல் உயிர்போக - என் காதலுள்ள உயிராகிய நீ சென்று விட, வெறு
உடம்போ இருக்கும் என்னா - உயிரற்ற உடம்பாகிய யானோ இங்கிருப்பேன்
என்று கூறி, தமியள் ஆனாள் - துணையற்றவளாகிய அவ்வணிக மங்கை,
தன் காதல் துணை இழந்த அன்றில் என இருந்து அழுதாள் - தனது
காதலுள்ள ஆணன்றிலை இழந்த அன்றிற்பேடுபோல இருந்து அழுதனன்.
உறவு
- உறவினர்க்காயிற்று. (23)
[-
வேறு] |
நன்னக ருறக்க
நீங்கி நடுக்கமுற் றழுங்கக் காழித்
தென்னகர் ஞானச் செல்வர் சிவனகர் தொறும்போய்ப் பாடி
அந்நக ரடைந்தா ரங்கோ ரணிமடத் திருந்தார் கேட்டீ
தென்னென வாள்விட் டாய்ந்து கோயிலி னிடைவந் தெய்தி. |
(இ
- ள்.) நல் நகர் உறக்கம் நீங்கி நடுக்கமுற்று அழுங்க - அந்த
நல்ல நகரி லுள்ளவர்கள் துயில் நீங்கி நடுங்கி வருந்தா நிற்க, காழித்தென்
நகர்ஞானச் செல்வர் - சீகாழியாகிய அழகிய நகரின்கண் அவதரித்த
சிவஞானச் செல்வராகிய ஆளுடைய பிள்ளையார், சிவன் நகர் தொறும்
போய்ப்பாடி - சிவபிரான் எழுந்தருளிய திருப்பதிக டோறுஞ் சென்று பதிகம்
பாடி, அந்நகர் அடைந்தார் - அத்திருப்பதியை யடைந்து, அங்கு ஓர்
அணிமடத்து இருந்தார் - அங்கு ஒரு அழகிய மடத்தின்கண் இருந்தவர்,
கேட்டு - இவ்வழுகை யொலியைக் கேட்டு, ஈது என்னென ஆள்விட்டு
ஆய்ந்து - இஃது என்னவென்று ஆள்விட்டு ஆராய்ந்து தெரிந்து கொண்டு,
கோயிலினிடை வந்தெய்தி - கோயிலின் பக்கல் வந்து சேர்ந்து.
|