வன்னியுங் கிணறு மிலிங்கமு மழைத்த படலம்471



வணிகன் உயிர்நீத்ததும், வணிகக்கன்னி அழுது வருந்துவதும் அறிந்து
நகரிலுள்ளாரும் துயிலுதலின்றி வருந்தின ரென்க. பிறர் துயரையும் தம்
துயர்போற் கருதினாராகலின் 'நன்னகர்' என்றார். நகர் என்றது
நகரிலுள்ளாரைக் குறித்தது. அடைந்தார், முற்றெச்சம். இருந்தார்,
வினைப்பெயர். ஆள் - ஏவலாள். (24)

கன்னிநீ யாரை யுற்ற தென்னெனக் கன்னி தாழ்ந்து
தன்னரு மரபு மீன்றார் தம்மையு மருகற் கென்றே
உன்னினர் மன்றல் பேசி யிறந்தது முயிரன் னானோ
டிந்நெறி யடைந்தீங் குற்ற நிகழ்ச்சியு மெடுத்துச் சொன்னாள்.

     (இ - ள்.) கன்னி நீ யார் என் உற்றது என - கன்னியே, நீ யார்,
உனக்கு என்ன நேர்ந்தது என்று வினவ, கன்னி தாழ்ந்து - அம்மாது
வணங்கி, தன் அரு மரபும் ஈன்றார் தம்மையும் - தனது அரிய மரபினையும்
தன்னைப் பெற்றோர்களையும், மருகற்கு என்றே உன்னினர் மன்றல் பேசி
இறந்ததும் - இந்த மருமகனுக்கே தன்னைக் கொடுப்பதென்று கருதி
மணம்பேசி இறந்தொழிந்ததனையும், உயிர் அன்னானோடு இந்நெறி
அடைந்து - உயிர்போல்வானுடன் இவ்வழியினை அடைய, ஈங்கு உற்ற
நிகழ்ச்சியும் எடுத்துச் சொன்னாள் - இங்கு நேர்ந்த நிகழ்ச்சியினையும்
எடுத்துக் கூறினான்.

     யாரை, ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது. அக்கன்னி தாழ்ந்து எனச்
சுட்டு வருவிக்க. மரபு முதலிய வற்றிலும் இரண்டனுருபு விரிக்க. (25)

தந்தையுந் தாயு மன்னார் தமியளா யிரங்கும் பேதைப்
வைந்தொடி யாவி காப்பான் பாம்புகோட் பட்டான் மாடே
வந்தவ னாக மெல்லா மருந்துரு வாகும் வண்ணஞ்
சிந்தைசெய் தருட்கண் வைத்தார் குதித்தது தீவாய் நஞ்சம்.

     (இ - ள்.) தந்தையும் தாயும் அன்னார் - உயிர்களுக்கு அப்பனும்
அம்மையும் போல்வராகிய ஆளுடைய பிள்ளையார், தமியளாய் இரங்கும்
பேதைப் பைந்தொடி - தனியாய் வருந்தும் பேதையாகிய பசிய வளையலை
யணிந்த அவ்வணிகமாதின், ஆவி காப்பான் - உயிரைக் காக்கும்பொருட்டு,
பாம்பு கோட்பட்டான் மாடே வந்து - பாம்பினாற் கொள்ளப்பட்டவன்
அருகே வந்து, அவன் ஆகம் எல்லாம் மருந்து உருவாகும் வண்ணம் சிந்தை
செய்து - அவன் உடல் முற்றும் அமிர்தமயமாகுமாறு திருவுள்ளங் கொண்டு,
அருள் கண் வைத்தார் - அருட்பார்வை வைத்தருளினார்; தீவாய்நஞ்சும்
குதித்தது - நெருப்பின் றன்மை வாய்ந்த நஞ்சு தான் ஏறிய விடத்தினின்றுங்
குதித்தோடியது.

     தந்தையும் தாயும் அற்ற வணிக மாதுக்கு உதவிபுரிய வந்த
பேரருளாளர் ஆகலின் 'தந்தையும் தாயு மன்னார்' என்றார். காப்பான்,
வினையெச்சம். பாம்பு கோட் பட்டான், தம்மினாகிய தொழிற் சொல் முன்வர
வலி இயல்பாயிற்று. விரைந்து இரங்கிற்று என்பார் 'குதித்தது' என்றார். (26)

எழுந்தன னுறங்கி னான்போ லிறந்தவன் யாருங் கண்டு
தொழுந்தகை ஞான வேந்தைத் தொழுதனர் துதிசெய் தார்வத்
தழுந்தினர் கன்னி யன்ன மனையவ ளின்பத் தீந்தேன்
பொழிந்தொரு புறத்தே கஞ்சம் பூத்ததோர் கொம்பி னின்றாள்.