(இ
- ள்.) இறந்தவன் உறங்கினான்போல் எழுந்தனன் - இறந்த
அவ் வணிகன் உறங்கியவன் எழுந்தாற்போல எழுந்தான்; யாரும் கண்டு -
அதனை அனைவரும் பார்த்து, தொழும் தகை ஞானவேந்தைத் தொழுதனர்
- அனைவரும் வணங்குந் தகுதியையுடைய ஞானவேந்தரை வணங்கி, துதி
செய்து ஆர்வத்து அழுந்தினர் - துதிமொழி கூறி மகிழ்ச்சிக் கடலுள்
மூழ்கினர்; கன்னி அன்னம் அனையவள் - கன்னியன்னப் பேட்டினை ஒத்த
அம்மாது, இன்பத் தீந்தேன் பொழிந்து கஞ்சம் பூத்தது ஓர் கொம்பின் -
இன்பமாகிய இனிய தேனைப் பொழிந்து தாமரை மலரப் பெற்றதாகிய ஒரு
கொம்புபோல, ஒருபுறத்தே நின்றாள் - ஒருபுறமாக ஒதுங்கி நின்றனள்.
தொழுதனர்,
முற்றெச்சம். கஞ்சம் பூத்ததோர் கொம்பின் என்றது இல்
பொருளுவமை. (27)
தலைவனை யிறந்த போதுந் தனியுயிர் பெற்ற போதுஞ்
சிலைநுதல் காதன் மாமன் செல்வியா யிருந்துந் தீண்டா
நிலைமையு மன்புங் கற்பி னீர்மையும் வியந்து நோக்கி
மலைமகண் ஞான முண்டார் வணிகளை நோக்கிச் சொல்வார். |
(இ
- ள்.) சிலை நுதல் - விற்போலும் நெற்றியையுடைய அவ் வணிக
மாது, காதல் மாமன் செல்வியாய் இருந்தும் - காதல்மிக்க மாமன் மகளா
யிருந்தும், இறந்த போதும் தனி உயிர் பெற்றபோதும் - தன் தலைவன் இறந்த
காலத்திலும் அவன் தனித்த உயிரினைப் பெற்ற காலத்திலும், தலைவனைத்
தீண்டா நிலைமையும் - அவனைத் தொடாதிருந்த தன்மையையும், அன்பும் -
அவளது அன்பினையும், கற்பின் நீர்மையும் - கற்பின் தன்மையையும்,
மலைமகள் ஞானம் உண்டார் நோக்கி வியந்து - உமையம்மையின்
ஞானப்பாலைப் பருகியருளிய பிள்ளையார் கண்டு வியந்து, வணிகனை
நோக்கிச் சொல்வார் - அவ்வணிகனைப் பார்த்துக் கூறுவாராயினர்.
சிலைநுதல்,
அன்மொழித் தொகை. தீண்டுதற்குரிய முறைமையும்
தீண்டத் தகும் தருணமும் உடையளாயிருந்தும், தன்
காதற்கிழமையுடையானது துஞ்சிய உடலைத் துயரத்தாற் றொடுதலும், அவன்
உயிர்த்தெழுந்தகாலை உவகையாற் றொடுதலும் எவ்வாற்றானும்
பழியன்றாகவும் தீண்டா திருந்தமையின் அவளது தற்காக்கும் பண்பினையும்,
அங்ஙனம் அவனுடலைப் பரிசியாது நிற்பினும் அவன்மாட்டுக் குன்றுதலின்றி
வளரும் அன்புடையளா யிருக்குந் தன்மையையும், அவ்வாற்றால் அவளது
கற்பின் பெற்றியையும் பிள்ளையார் நோக்கி வியந்தனர் என்க. (28)
வருதிநின் மரபுக் கெல்லா மணியனா யுன்றன் மாமன்
தருதிரு வளையா ளின்பஞ் சாருநா டுன்பம் வந்து
பெருகுநா ளன்றி யென்றுன் மெய்தொடப் பெறுவ ளீண்டே
திருமண முடித்துக் கொண்டு போகெனச் செப்ப லோடும். |
(இ
- ள்.) நின் மரபுக்கு எல்லாம் மணி அனாய் வருதி - நினது மரபு
முழுதுக்கும் மணிபோல்வாய் வருக; உன்றன் மாமன் தரு திரு அனையாள் -
உனது மாமன் பெற்ற திருமகள்போன்ற இம்மாது, இன்பம் சாரும் நாள் -
நினக்கு இன்பம் வந்து பொருந்தும் நாளிலும், துன்பம் வந்து பெருகு நாள்
அன்றி - துன்பம் வந்து மிகு நாளிலுமல்லாமல், என்று - வேறெந்தநாளில்,
உன் மெய் தொடப் பெறுவள் - உனது உடலினைத் தீண்டப் பெறுவாள்;
ஈண்டே - (ஆதலால்) இவ்விடத்திலேயே, திருமணம் முடித்துக் கொண்டு
|