போக எனச் செப்பலோடும்
- திருமணத்தை முடித்துக்கொண்டு போவாயாக
வென்று சொல்லியவளவில்.
அவன்
அரவுகடித் திறத்தலாகிய துன்பமும், உயிர்த் தெழுதலாகிய
இன்பமும் எய்திய பொழுதுகளில் அவனைத் தீண்டாது நின்றாளாகலின்
'இன்பஞ் சாரு நாள் துன்பம் வந்து பெருகு நாள் அன்றி என்று உன்
மெய்தொடப் பெறுவள்' என்றும், அவள் கன்னியா யிருப்பதே நின்னைத்
தொடுதற்குத் தடையா யிருத்தலின் அத் தடை நீங்க ஈண்டே திருமணம்
முடித்துக்கொண்டு போக என்றும் பிள்ளையார் அருளினார் என்றார்.
போகென என்பதில் அகரம் தொக்கது. (29)
செங்கணே
றனையா னையன் றிருமொழி தலைமேற் கொண்டு
பங்கயன் படைத்த சாதி நான்கையும் பாது காப்பீர்
எங்குல வணிக ரின்றிக் கரிகளு மின்றி யீங்கே
மங்கல முடிக்கும் வண்ணம் யாதென வணங்கிச் சொன்னான். |
(இ
- ள்.) செங்கண் ஏறு அனையான் - சிவந்த கண்களையுடைய
ஏறு போல்வனாகிய அவ்வணிகள், ஐயன் திருமொழி தலைமேல்கொண்டு -
பிள்ளையாரின் திருமொழியினை முடிமேற்கொண்டு, பங்கயன் படைத்த சாதி
நான்கையும் பாதுகாப்பீர் - பிரமன் படைத்த நான்கு வருணத்தையும்
பாதுகாப்பவரே, ஈங்கே - இங்கு, எம் குல வணிகர் இன்றி - எமது குல
வணிக ரில்லாமல், கரிகளும் இன்றி - பிற சான்றுகளுமில்லாமல், மங்கலம்
முடிக்கும் வண்ணம் யாது என - மண முடிக்கும் வண்ணம் எங்ஙன மென்று,
வணங்கிச் சொன்னான் - வணங்கிக் கூறினான்.
நாற்பாற்
குலத்தினரும் ஒழுக்கத்தின் வழுவாமற் காக்கும் இயல்புடையீர
் என்பான் 'சாதி நான்கையும் பாதுகாப்பீர்' என்றும், அப் பெற்றியராய
தேவரீரே யாங்கள் முறைமை வழுவாமல் மண முடித்துக்கொள்ளும்
உபாயமும் உரைத்தருள வேண்டு மென்பான் 'மங்கல முடிக்கும் வண்ணம்
யாது' என்றும் அவ் வணிகன் கூறினான் என்றார். (30)
கன்னியை
யீன்ற ஞான்றே யுனக்கென்றுன் காதன் மாமன்
உன்னிய துறவி னுள்ளா ரறிவரே யுனக்கீ தன்றி
வன்னியுங் கிணறு மிந்த விலிங்கமுங் கரிகண் மைந்தா
இந்நிலை வதுவை செய்தி யெம்முரை கடவா தென்றார். |
(இ
- ள்.) உன் காதல் மாமன் - உனது அன்புள்ள மாமன், கன்னியை
ஈன்ற ஞான்றே - இக் கன்னியைப் பெற்றபொழுதே, உனக்கு என்று
உன்னியது உறவின் உள்ளார் அறிவரே - உனக்கே யென்று கருதிப்
பேசியதை உறவினர் பலர் அறிவாரே, உனக்கு ஈது அன்றி - உனக்கு
இதுவே யல்லாமல், இந்த வன்னியும் கிணறும் இலிங்கமும் கரிகள் - இந்த
வன்னி மரமுங் கிணறும் இலிங்கமும் சான்றுகளாகும்; மைந்தா - புதல்வனே,
எம் உரை கடவாது இந்நிலை வதுவை செய்தி என்றார் - எமது சொல்லைக்
கடவாமல் இவ்விடத்திலேயே மணமுடிப்பாயாக என்றருளினர்.
எங்குல
வணிகரின்றி என அவன் கூறியதற்கு மாற்றமாக 'கன்னியை
ஈன்ற ஞான்றே யுனக்கென்றுன் காதன் மாமன் உன்னிய துறவினுள்ளா
ரறிவரே' என்றும், கரிகளுமின்றி என்றதற்கு மாற்றமாக 'வன்னியும் கிணறும்
இந்த விலிங்கமும் கரிகள்'
|