பூங்கொத்துக்கள்
மலர்ந்த மாலையையணிந்த பெண்ணவாய், என்
கொழுநனுக்கு ஆசைப்பட்டு வந்தவளான காமக் கிழத்திக்கு - என்
கொழுநனை விரும்பி வந்தடைந்த காமக்கிழத்தியாகிய உனக்கு, வாயும்
வீறும் ஏன் - பேச்சும் இறுமாப்பும் எதற்கு.
ஊர்,
சாதி என்பன ஊரினள், சாதியினள் என்னும் பொருளில் வந்தன.
ஊர், குலம், பெற்றோர் அறியப் பெறாதவளும், உறவினர் முதலானோர்
காண அங்கி சான்றாக என் கணவனால் மணக்கப்படாதவளும், என்
கணவனின்பத்தை விரும்பி வலிதிலடைந்த காமக்கிழத்தியுமான நினக்கு
இவ்வளவு வாயும் பெருமிதமும் ஏன் என நிந்தித்தனள் என்க. வாய்
பேச்சுக்காயிற்று. (37)
உரியவன் றீமுன் னாக வுன்னைவேட் டதற்கு வேறு
கரியுள தாகிற் கூறிக் காட்டெனக் கழற லோடும்
எரிசுட வாடிச் சாய்ந்த விணர்மலர்க் கொம்பிற் சாம்பித்
தெரியிழை நாணஞ் சாய்ப்ப நின்றிது செப்பு கின்றாள். |
(இ
- ள்.) உரியவன் - எனக்கு உரிய நாயகன், தீ முன்னாக உன்னை
வேட்டதற்கு வேறு கரி உளதாகில் - அனல் முன்னாக நின்னை மணந்ததற்கு
வேறு சான்று உளதேல், கூறிக் காட்டு எனக் கழறலோடும் - அதனைக்
கூறிக் காட்டுவா யெனச் சொல்லிய வளவில், எரி சுட - நெருப்புச் சுடுதலால்,
வாடிச் சாய்ந்த இணர்மலர்க் கொம்பின் - வாடிச் சாய்ந்த
கொத்துக்களையுடைய பூங்கொம்பு போல, சாம்பி - வாடி, தெரி இழை
நாணம் சாய்ப்ப நின்று - ஆராய்ந்த அணிகளையுடைய அம்மாது நாணம்
தன்னைச் சாய்க்க நின்று, இது செப்புகின்றாள் - இதனைக் கூறுகின்றாள்.
காட்டுதல்
- மெய்ப்பித்தல். தெரியிழை, அன்மொழித் தொகை. (38)
அரவின்வாய்ப் பட்ட வைக லாருயி ரளித்த ஞானப்
புரவல ரருளா லெங்கோன் புறம்பய நாதன் வன்னித்
தருவொடு கிணறுகாணச் செய்தனன் சாறம் மூன்று
கரிகளு முள்ள வென்றாள் கற்பினா லொப்பி லாதாள். |
(இ
- ள்.) அரவின் வாய்ப்பட்ட வைகல் - (என் கொழுநன்) பாம்பின்
வாய்ப்பட்ட போது, ஆருயிர் அளித்த ஞானப் புரவலர் அருளால் - அரிய
உயிரினைக் கொடுத்தருளிய ஞானவேந்தராகிய ஆளுடைய பிள்ளையாரின்
ஆணையால், எம் கோன் - எமது தலைவன், புறம்பய நாதன் வன்னித்
தருவொடு கிணறு காண - திருப்புறம்பயத்திலுள்ள சிவலிங்கப் பெருமானும்,
வன்னி மரமுங் கிணறுங் காண, சாறு செய்தனன் - மணம் புரிந்தான்;
அம்மூன்று கரிகளும் உள்ள என்றாள் - அந்த மூன்று சான்றுகளும் உள்ளன வென்று கூறினள்,
கற்பினால் ஒப்பிலாதாள் - கற்பினால் ஒப்பற்றவள்.
சாறு
- விழா, மன்றல். ஒப்பிலாதாள் உள்ள வென்றாள் என முடிக்க. (39)
மாற்றவ ணகைத்து நன்று நன்றுநின் மன்றல் வேள்விக்
கேற்றன கரியே சொன்னா யிங்குமக் கரிகள் மூன்றுந்
தோற்றுமே லதுவு மெய்யே யென்றன டோகை யோடும்
வேற்றுமை யிலாத லிளையவள் விழுமங் கூரா.
|
(இ
- ள்.) மாற்றவள் நகைத்து - அதனைக் கேட்டு மாற்றாள் சிரித்து,
நன்று நன்று நின் மன்றல் வேள்விக்கு ஏற்றன கரியே சொன்னாய் - நன்று
நன்று, நினது மண வேள்விக்கு ஏற்றனவாய சான்றுகளையே கூறினை;
|