அக் கரிகள் மூன்றும்
இங்கும் தோற்றுமேல் - அச் சான்று மூன்றும் இங்கும்
தோற்றுமாயின், அதுவும் மெய்யே என்றனள் - அந்த மணமும் உண்மையே
யாகும் என்று கூறினள்; தோகையோடும் வேற்றுமை இலாத சாயல்
இளையவள் - மயிலுடன் வேற்றுமை யில்லாத சாயலையுடைய இளையாள்,
விழமம் கூரா - துன்ப மிகுந்து.
நன்று
நன்று, இகழ்ச்சி குறித்தது. நினது மன்றல் பொய்ம்மை
யாதல்போல் கரியும் பொய்யென்பாள் 'நின் மன்றல் வேள்விக் கேற்றன
கரியே சொன்னாய்' என்றாள். தோற்றா வென்னுங் கருத்தால் 'தோற்றுமேல்'
என்றா ளென்க. (40)
வெவ்வுயிர்ப் பெறிய வில்போய் மெல்விர னெறிக்குங் கையால்
அவ்வயி றதுக்கும் வீழுங் கண்புனல் வெள்ளத் தாழுங்
கொவ்வைவாய் துடிக்கு நாணந் தலைக்கொள்ளுங் கூசு மன்னோ
தெய்வமே யாவா வென்னு மென்செய்கேன் சிறியே னென்னும். |
(இ
- ள்.) வெவ்வுயிர்ப்பு எறிய - வெம்மையாகிய பெருமூச் செறிய,
இல்போய் - வீட்டினுட் சென்று, மெல் விரல் நெரிக்கும் - மெல்லிய
விரல்களை நெரிப்பாள்; கையால் அவ்வயிறு அதுக்கும் - கையினால் அம்
மெல்லிய வயிற்றைப் பிசைவாள்; வீழும் - கீழே விழுவாள்; கண் புனல்
வெள்ளத்து ஆழும் - கண்ணீர்ப் பெருக்கில் அழுந்துவாள்; கொவ்வை வாய்
துடிக்கும் - கொவ்வைக் கனி போன்ற உதடு துடிப்பாள்; நாணம்
தலைக்கொளும் கூசும் - வெட்கந் தலைக்கொள்ளுவாள், கூசுவாள்; ஆ ஆ
தெய்வமே என்னும் - ஐயோ தெய்வமே என்பாள்; என் செய்கேன் சிறியேன்
என்னும் - என்ன செய்வேன் சிறியே னென்பாள்.
அவ்
வயிறு - அழகிய வயிறு. வாய் துடிக்கும், சினை வினை
முதன்மேல் நின்றது. அன்னோ, ஆ ஆ என்பன இரக்கப் பொருளில் வந்த
இடைச் சொற்கள். (41)
தாதைதா யிறந்த வன்றே தமியளா யிங்குப் போந்த
பேதையேற் காருண் டைய பேதுறும் வணிகற் கன்று
மாதுல னாகி ஞாதி வழக்கறுத் துரிமை யீந்த
நாதனே யேதி லாய்வாய் நகையினிற் காத்தி யென்னா. |
(இ
- ள்.) தாதை தாய் இறந்த அன்றே - அப்பனும் அம்மையும்
இறந்த பொழுதே, தமியளாய் இங்குப் போந்த பேதையேற்கு - தனியளாகி
இங்கு வந்த அறிவில்லாத எனக்கு, ஐய - ஐயனே, யார் உண்டு - (நின்னை
யன்றி வேறு துணை) யார் உளர்; பேதுறும் வணிகற்கு - மனமயங்கி
வருந்திய வணிகனுக்கு, அன்று - முன்னொரு காலத்தில், மாதுலனாகி -
மாமனாக வந்து, ஞாதி வழக்கு அறுத்து - பங்காளிகளின் வழக்கினை
ஒழித்து, உரிமை ஈந்த நாதனே - அவன் உரிமையைக் கொடுத்தருளிய
இறைவனே, ஏதிலாள் வாய் நகையினில் காத்தி என்னா - மாற்றாள்
வாயிலிருந்து வரும் இகழ்ச்சி மொழியினின்றும் என்னை நீக்கிக்
காத்தருள்வாயாக வென்று குறையிரந்து வேண்டி.
அன்று
ஞாதியரால் வருந்துதலுற்ற வணிகனொருவனுக்கு மாதுலனாகி
வந்து வழக்கறுத்து உரிமை யீந்தீர் ஆகலின், இன்று மாற்றவளால்
வருந்தலுறும் வணிகமாதாகிய எனக்கும் எளிவந்து உரிமை யீவீர் என்றாள்
என்க. வணிகற்கு மாதுலனாகி
|