வன்னியுங் கிணறு மிலிங்கமு மழைத்த படலம்479



ஞாதி வழக்கறுத் துரிமை யீந்த வரலாற்றை இப் புராணத்து, மாமனாக வந்து
வழக்குரைத்த படலததிற் காண்க. (42)

அன்றிர வுண்டி யின்றித் துயிலின்றி யழுங்கிப் பின்னாட்
பொன்றிணி கமல புண்ணியப் புனறோய்ந் தண்ட
நின்றிழி விமானக் கோயி னிரம்பிய வழகர் முன்னாச்
சென்றிரு தாளில் வீழ்ந்து தன்குறை செப்பி வேண்டும்.

     (இ - ள்.) அன்று இரவு உண்டியின்றித் துயில் இன்றி அழுங்கி -
அன்று இரவு உணவு மின்றி உறக்கமுமின்றி வருந்தி, பின்னாள் - மறுநாள்,
பொன்திணி கமல வாவி - செறிந்த பொற்றாமரைகளையுடைய வாவியில்,
புண்ணியப் புனல் தோயந்து - அறவடிவாகிய நீரில் முழுகி, அண்டம் நின்று
இழி விமானக் கோயில் - வானினின்றும் இறங்கிய விமானமாகிய
திருக்கோயிலில் எழுந்தருளிய, நிரம்பிய அழகர் முன்னாச் சென்று -
பேரழகராகிய சோமசுந்தரக் கடவுளின் திருமுன் சென்று, இருதாளில் வீழ்ந்து
- அவருடைய இரண்டு திருவடிகளிலும் வீழ்ந்து வணங்கி, தன் குறை செப்பி
வேண்டும் - தனது குறையைக் கூறி இதனை வேண்டுவாள்.

     கோயிலில் எழுந்தருளிய என விரித் துரைக்க. (43)

அன்றெனைக் கணவன் வேட்ட விடத்தினி லதற்குச் சான்றாய்
நின்றபைந் தருவு நீயுங் கிணறுமந் நிலையே யிங்கும்
இன்றுவந் தேதி லாள்வாய் நகைதுடைத் தெனைக்கா வாயேற்
பொன்றுவ லென்றாள் கற்பின் புகழினை நிறுத்த வந்தாள்.

     (இ - ள்) அன்று எனைக் கணவன் வேட்ட இடத்தினில் - அன்று
என்னை நாயகன் மணம்புரிந்த இடத்தில், அதற்குச் சான்றாய் நின்ற
பைந்தருவும் நீயும் கிணறும் - அதற்குச் சான்றாகி நின்ற பசிய வன்னி
மரமும் சிவலிங்கமாகிய நீயும் கிணறும், அந்நிலையே இன்று இங்கும் வந்து
- அங்ஙனமே இன்று இங்கும் வந்து, ஏதிலாள் வாய் நகை துடைத்து எனைக்
காவாயேல் - மாற்றாளின் இகழ்மொழியை விரையப் போக்கி அடியேனைக்
காத்தருளாவிடின், பொன்றுவல் என்றாள் - இறந்துபடுவே னென்று கூறினாள்,
கற்பின் புகழினை நிறுத்த வந்தாள் - கற்பினது புகழை உலகில் நிலைநிறுத்த
வந்த அவ்வணிக மாது.

     தருவும் கிணறும் என்னும் அஃறிணைப் படர்க்கை யொருமைப்
பெயர்களும், நீயும் என்னும் முன்னிலை யொருமைப் பெயரும் விரவி வந்து
காவாயேல் என்னும் முன்னிலை யொருமைவினை கொண்டது
இடவழுவமைதியும் பால் வழுவமைதியும் ஆகும்.

     கற்பின் புகழ் - கற்பாலுளதாகும் புகழ். (44)

அல்லலுற் றழுங்கி நின்றாள் பரிவுகண் டந்தண் கூடல்
எல்லையில் கருணை மூர்த்தி யருளினா லெவருங் காணத்
தொல்லையின் படியே யன்னாள் சொல்லிய கரிகண் மூன்றும்
ஒல்லைவந் திறுத்த கோயி லுத்தர குணபா லெல்லை.