அந்நிலை யிளையாள் கேள்வ னடியில்வீழ்ந் திரப்பா ளைய
என்னது கற்பை யின்று நிறுத்தினா ளிவண்மாற் றாளன்
றன்னையி லாதேற் கன்னை யாயினா ளிவளும் யானும்
இன்னுயி ருடல்போல் வாழ்வோ மெனத்தழீஇத் தம்மி னட்டார். |
(இ
- ள்.) அந்நிலை - அப்பொழுது, இளையாள் கேள்வன் அடியில்
வீழ்ந்து இரப்பாள் - இளையவள் நாயகன் திருவடியில் வீழ்ந்து இரந்து
வேண்டுவாள்; ஐய - ஐயனே, இவள் என்னது கற்பை இன்று நிறுத்தினாள் -
இவள் என்னுடைய கற்பை இன்று நிலைநிறுத்தினாள்; மாற்றாள் அன்று -
(ஆகையால் இவள் எனக்கு) மாற்றா ளல்லள்; அன்னை இலாதேற்கு
அன்னை ஆயினாள் - அன்னை இல்லாத எனக்கு அன்னையாயினாள்;
இவளும் யானும் இன் உயிர் உடல்போல் வாழ்வோம் என - இனி இவளும்
யானும் இனிய உயிரும் உடலும் போலப் பிரிவின்றி வாழ்வோமென்று கூறி,
தம்மில் தழீஇ நட்டார் - தங்களுள் ஒருவரை யொருவர் தழுவி நட்புப்
பூண்டனர்.
நிறுத்தினா
ளாகலின் மாற்றாளல்லள் அன்னையாயினாள் என்.க
என்னது, னகரம் விரித்தல். (50)
உடம்பினா லிரண்டே யன்றி யுயிர்ப்பொரு ளிரண்டற் றுள்ளம்
மடம்படு மழுக்கா றற்று மைந்தரு மனைய ராக
விடம்படு மைவாய் நாகம் விழுங்கிரை யொத்துத் தம்மில்
இடம்படு மன்புற் றின்புற் றிருவரு மிருந்தார் மன்னோ.
|
(இ
- ள்.) இருவரும் - அவ்விருவரும், உடம்பினால் இரண்டே அன்றி
- உடலினா லிரண்டே யல்லாமல், உயிர்ப் பொருள் இரண்டு அற்று - உயிர்ப்
பொருளால் இரண்டாகாமல், உள்ளம் மடம்படும் அழுக்காறு அற்று -
உள்ளத்தின்கண் அறியாமையால் உண்டாகும் பொறாமை யின்றி, மைந்தரும்
அனையராக - புதல்வர்களும் அத்தன்மையரேயாக, விடம்படும் ஐவாய்
நாகம் விழுங்கு இரை ஒத்து - நஞ்சினையுடைய ஐந்தலைப் பாம்பு விழுங்கும்
இரையைப்போன்று, தம்மில் இடம்படும் அன்புற்று இன்புற்று இருந்தார் -
தங்களுள் மிகுந்த அன்பினைப் பொருந்தி இன்பமெய்தி இருந்தனர்.
உயிர்ப்
பொருள் - உயிராகிய பொருள். ஐவாய் நாகம் ஐந்து
வாயாலும் இரை விழுங்கினும் அஃது ஐ வேறு பாம்பாகாமை போல
இவர்களும் இருவேறு உடலினராயினும் அன்பால் இருவராகாதிருந்தனர்
என்றார். இடம்படும் - அகன்ற. மன், ஓ அசைகள். (51)
அருந்ததி யனையாள் கேள்வற் காயுளு மானாச் செல்வப்
பெருந்தன நிறைவுஞ் சீரு மொழுக்கமும் பீடும் பேறு
தருந்தவ நெறியுங் குன்றாத் தருமமும் புகழும் பல்க
இருந்தனள் கமலச் செல்வி யென்னவீற் றிருந்து மன்னோ. |
(இ
- ள்.) அருந்ததி அனையாள் - அருந்ததி போன்றாளாகிய
அவ்விளைய நங்கை, கேள்வதற்கு ஆயுளும் ஆனாச் செல்வப் பெருந்தன
நிறைவும் - தனது நாயகனுக்கு வாணாளும் நீங்காத பொருட் செல்வ
நிறைவும், சீரும் ஒழுக்கமும் பீடும் - சிறப்பும் ஒழுக்கமும் பெருமையும்,
பேறு தரும் தவநெறியும் - பயன் தரும் தவ வொழுக்க
|