வன்னியுங் கிணறு மிலிங்கமு மழைத்த படலம்483



மும், குன்றாத் தருமமும் புகழும் பல்க - குன்றாத அறமும் புகழும்
மேலோங்க, கமலச் செல்வி வீற்றிருந்தென்ன இருந்தனள் - பூமகள்
வீற்றிருந்தாற் போல வாழ்ந்திருந்தனள்.

     வீற்றிருந்தென்ன என மாறுக. திருமகள் உறையுங்கால் இவையெல்லாம்
பல்குமாதலின் 'கமலச் செல்வி வீற்றிருந்தென்ன இருந்தனள்' என்றார். (52)

பொன்னவிர் கமலம் பூத்த பொய்கைசூ ழால வாயெம்
முன்னவன் விளையாட் டெல்லை கண்டியார் மொழிய வல்லார்
இன்னமு மளவின் றென்ப வெங்குரு நாத சாமி
சொன்னவா றுங்கட் கெண்ணெண் காதையுஞ் சொன்னே னம்ம.

     (இ - ள்.) பொன்அவிர் கமலம் பூத்த பொய்கைசூழ் ஆலவாய் -
பொன்போல விளங்குந் தாமரைகள் மலர்ந்த பொய்கைகள் சூழ்ந்த
திருவாலவாயில் எழுந்தருளியுள்ள எம் முன்னவன் விளையாட்டு எல்லை
கண்டு மொழியவல்லார் யார் - எமது முதல்வனது திருவிளையாட்டின்
முடிவைக் கண்டு மொழிய வல்லவர் யாவருளர்; இன்னமும் அளவு இன்று
என்ப - இன்னும் அளவில்லை என்று கூறுவர்; எம் குருநாதசாமி சொன்ன
வாறு - எமது குருநாதனாகிய முருகப்பெருமான் கூறியருளியவாறே,
எண்ணெண் காதையும் உங்கட்குச் சொன்னேன் - அறுபத்துநான்கு
திருவிளையாடல்களையும் உங்களுக்குச் சொன்னேன்.

     பொற்றாமரைப் பொய்கை பொருந்திய என்றுமாம். கண்டியார், இகரம்
குறுகாது நின்றது. குருநாதனாகிய சாமி என்க. அம்ம, வியப்பின்கண் வந்தது.
மேல் புராண வரலாற்றில்,

அத்தலத் தனைய மூவகைச்சிறப்பு மளவிலா வுயிர்க்கெலாங் கருணை
வைத்தவன் செய்த திருவிளையாட்டும் வரைவுரங் கிழியவே லெடுத்த
வித்தக னெனக்கு விளம்பியவாறே விளம்புவ னுமக்கென வந்த
உத்தம முனிவர் யாவருங்கேட்க வுணர்த்துவான் கடலெலா முண்டான்"

" என்று கூறியிருத்தலுங் காண்க. (53)

             [எழுசீரடியாசிரிய விருத்தம்]
என்றுதென் மலைமே லிருந்தமா தவத்தோ னின்னருட் குருபரன் 
                                           றனையும்
அன்றவன் றிருவாய் மலர்ந்தவா சகமு மருள்கனிந் தொழுகவுள்
                                           ளடக்கித்
தென்றமி ழால வாய்த்தனிப் பதியைச் சென்னிமேற் பன்னிரண்                                            டும்பர்
ஒன்றவைத் திமையா வங்கயற் கண்ணி யுடனுறை யொருவனை
                                          நினைந்தான்.

     (இ - ள்.) என்று - என்று கூறி, தென் மலைமேல் இருந்த
மாதவத்தோன் - பொதியின் மலைமேல் இருந்த பெருந் தவத்தினனாகிய
குறுமுனிவன், இன் அருள் குருபரன்தனையும் - இனிய அருளையுடைய
குருநாதனையும், அன்று அவன் திருவாய் மலர்ந்த வாசகமும் - அன்று அக்
குருநாதன் திருவாய்மலர்ந்தருளிய உபதேச மொழியையும், அருள்கனிந்து
ஒழுக உள் அடக்கி - அருள் பழுத்து ஒழுகுமாறு உள்ளத்தின் கண்
அடக்கி, தென் தமிழ் ஆலவாய்த் தனிப்பதியை - அழகிய தமிழையுடைய
திரு