வன்னியுங் கிணறு மிலிங்கமு மழைத்த படலம்485



உணர்ந்தான் புதைபட உணர்ந்தான் என இயையும். புரையற என்பதற்கு
வெற்றிடம் சிறிது மில்லையாக என்றலுமாம். காட்சி - காணப்படு பொருள்.
கண் - காணுங்கருவி காண்பான் முதலியவற்றை அறிபவன், அறிவு,
அறியப்படுபொருள் என்று கொள்க; இவை ஞாதிரு, ஞானம், ஞேயம் என்று
கூறப்படும். புதைபட - ஞாதிரு என்றும் ஞானம் என்றும் ஞேயம் என்றும்
அறியும் சங்கற்ப ஞானம் மறைய. இவை மூன்றும் நழுவாமல் நழுவி நிற்க
வேண்டுமென்பர் பெரியோர். உரை உணர்வு இறந்த என்பதற்கு
வேதாகமங்களாகிய பாசஞானத்தையும், சுட்டறிவாகிய பசுஞானத்தையும்
கடந்த என்றும், உணர்வு அற என்பதற்குத் தற்போதமற என்றும்
உரைத்தலுமாம். காண்பான் கண் காட்சி எனவும், உண்மை உணர்வு
ஆனந்தம் எனவும் நிற்கற்பாலன செய்யுளாதலின் மாறிநின்றன வென்க. (55)

                      ஆகச் செய்யுள் - 3,310