அருச்சனைப் படலம் 489



ஐம்புலனுங் கூடற் பெருமா னடியொதுக்கி
நம்பனுரு வெழுத்தைந்து நாவாடக் கைகூப்பித்
தம்புனித சைவத் தவத்தெய்வத் தேர்மேற்கொண்
டும்பர் வழிநடக்க லுற்றார்க ணற்றவரே.

     (இ - ள்.) நல் தவர் - நல்ல தவத்தினையுடைய அம் முனிவர்கள்,
ஐம்புலனும் கூடல் பெருமான் அடி ஒதுக்கி - ஐந்து பொறிகளையும் கூடல்
நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடியிற் பதியுமாறு ஒதுக்கி, நம்பன்
உரு எழுத்து ஐந்தும் நா ஆட - அவ்விறைவன் திருவுருவமாகிய திருவைந்
தெழுத்தையும் நா உருவேற்ற, கைகூப்பி - கைகளை முடியிற் கூப்பி,
தம்புனித சைவ தவத் தெய்வத் தேர் மேற்கொண்டு - தமது தூய சைவ
நெறியிற் றப்பாத தவமாகிய தெய்வத்தன்மை பொருந்திய தேரில் ஏறி, உம்பர்
வழி நடக்க லுற்றார்கள் - வான் வழியாக நடக்கத் தொடங்கினர்.

     நா ஆட - நா உச்சரிக்க. தவ வலியால் விசும்பு நெறிச் செல்லுதலை.
‘தவத் தெய்வத் தேர் மேற்கொண்டு உம்பர் வழி நடக்கலுற்றார்’ என்றார்;
மேல் கீரனுக் கிலக்கண முபதேசித்த படலத்தில்,

ழுஉடைய நாயகன் றிருவுள முணர்ந்தனன் முடிமேல்
அடைய வஞ்சலி முகிழ்த்தன னருந்தவ விமானத்
திடைபு குந்தனன் பன்னியோ டெழுந்தன னகல்வான்
நடைய னாகிவந் தடைந்தன னற்றமிழ் முனிவன்ழு

எனவும்,

ழுஇயங்கு மாதவத் தேரினும் பன்னியோ டிழிந்துழு

எனவும் கூறியிருத்தல் காண்க. மேல் ‘வம்மின்க ளென்றானே’ என்றமையின்
அகத்தியனாரும் ஒருங்கு சென்றமை பெறப்படும். (8)

செய்ய சடையர் திருநீறு சண்ணித்த
மெய்யர்தவ நோற்றிளைத்த மேனியின ருட்புறம்புந்
துய்யரணி கண்டிகையர் தோலு மருங்குடையர்
ஐயர் தவத்துக் கணிகலம்போற் போதுவார்.

     (இ - ள்.) தவத்துக்கு அணிகலம்போல் ஐயர் - தவத்திற்கு
அணிகலம்போலும் முனிவர்கள், செய்ய சடையர் - சிவந்த சடையினை
யுடையராய், திருநீறு சண்ணித்த மெய்யர் - திருநீறு தரித்த உடலினை
யுடையராய், தவம் நோற்று இளைத்த மேனியினர் - தவம் புரிதலால்
இளைத்த உருவினை யுடையராய், உள் புறம்பும் துய்யர் - அகமும் புறமும்
தூய்மை யுடையராய், அணி கண்டிகையர் - அணிந்த உருத்திராக்க
மாலையை யுடையராய், தோலும் மருங்கு உடையர் போதுவார் - தோலையும்
இடையில் உடையராய்ப் போவாராயினர்.

     தவ எனப் பிரித்து உரிச் சொல்லாக்கி மிக நோற்று என்றுரைப்பாரும்,
ஐய தவத்துக்கு எனப் பாடங்கொண்டு அழகிய தவத்துக்கு என்றுரைப்பாரும்
உளர். தோலும் என்பதன் உம்மை எச்சப் பொருட்டு, தவமும் இவராற்
சிறப்படைந்த தென்பார் ‘தவத்துக் கணிகலம்போல்’ என்றார். ஐயர்
அணிகலம்போற் போதுவார் எனக் கிடந்தாங்கு உரைத்தலுமாம்.