சங்கப்பலகை தந்த படலம்49



     தமிழ் என்றது தமிழ்ச் செய்யுட்களை யுணர்த்திற்று. முதிய என்றது
தமிழுக்கு அடை. மதிவிளங்க என்பதற்குப் புலமைத்திறம் வெளிப்பட
என்றுரைத்தலுமாம். (38)

                 [கலிநிலைத்துறை]
வங்கிய சேகரன் வங்கிய சூடா மணிதன்னைப்
பொங்கிய தேசார் முடிபுனை வித்துப் புவிநல்கி
இங்கியல் பாச வினைப்பகை சாய விருந்தாங்கே
சங்கியல் வார்குழை யானடி யொன்றிய சார்புற்றான்.

     (இ - ள்.) வங்கிய சேகரன் - வங்கிய சேகரபாண்டியன், வங்கிய
சூடாமணி தன்னை - வங்கிய சூடாமணிக்கு, பொங்கியதேசு ஆர் முடி
புனைவித்து - விளங்கிய ஒளி நிறைந்த முடி சூட்டி, புவிநல்கி -
புவியாட்சியை அளித்து, இங்கு இயல்பாசவினைப்பகைசாய இருந்து -
இம்மையில் அமைந்த வினைப்பாசம் என்னும் பகைமை கெட இருந்து,
ஆங்கே சங்கு இயல்வார் குழையான் அடி ஒன்றிய சார்பு உற்றான் -
மறுமையிற் சங்கினாலமைந்த நீண்ட குழையினையுடைய சிவபெருமான்
திருவடியிற் கலத்தலாகிய வீடுபேற்றை அடைந்தனன்.

     வங்கிய சூடாமணிக்கு என நான்கனுருபாகத் திரிக்க. பாசவினை -
வினைக் கயிறு;

ழுபாசமாம் வினைப் பற்றறுப்பான்ழு

என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுளும் நோக்குக. சார்பு -
முத்திநிலை என்னும் பொருட்டு. (39)

                      ஆகச் செய்யுள் 2432.