490திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



ழுமானின், உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந் தியங்கும் யாக்கையர்ழு
என்று திருமுருகாற்றுப்படையும்,
ழுமாசி லாத மணிதிகழ் மேனிமேற்
பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்ழு

என்று பெரிய புராணமும் கூறுவன இங்கு நோக்கற் பாலன. (9)

             [அறுசீரடியாசிரிய விருத்தம்]
புண்ணியந் தழைக்குந் தெய்வத் தலங்களும் புலன்கள் வென்றோர்
நண்ணிய வனமுந் தீர்த்த நதிகளுந் தவத்தோர் நோற்கும்
வண்ணமு நோக்கி நோக்கி மலயமா முனிவன் காட்டக்
கண்ணிணை களிப்ப நோக்கிக் கைதொழு திறைஞ்சிச் செல்வார்.

     (இ - ள்.) புண்ணியம் தழைக்கும் தெய்வத் தலங்களும் - அறத்தைப்
பெருக்குந் தெய்வத் திருப்பதிகளையும், புலன்கள் வென்றோர் நண்ணிய
வனமும் - ஐம்புலன்களையும் வென்றடக்கிய முனிவர்கள் வசிக்கும்
காடுகளையும், தீர்த்த நதிகளும் - தூய நதிகளையும், தவத்தோர் நோற்கும்
வண்ணமும் நோக்கி நோக்கி - முனிவர்கள் தவம் புரியுந் தன்மையையும்
ஆராய்ந்து கண்டு, மலயமா முனிவன் காட்ட - பொதியின் மலையை யுடைய
குறுமுனிவன் காட்ட, கண் இணை களிப்ப நோக்கி - கண்க ளிரண்டும்
களிப்பக் கண்டு, கைதொழுது இறைஞ்சிச் செல்வார் - கைகூப்பி வணங்கிச்
செல்வாராயினர்.

     அங்கே புரியும் புண்ணியம் ஒன்று பலவாகப் பல்கும் என்பார்
‘புண்ணியந் தழைக்குந் தெய்வத் தலங்கள்’ என்றார். தீர்த்தங்களும் நதிகளும்
என்றுமாம். (10)

சீறுகொ ளிலங்கை வேந்தைச் செகுத்திட விராமன் பூசித்
தாறணி விரூபக் கண்ண னருள்பெறு தலமீ தும்பர்
ஏறிவீழ்ந் திறந்தோர் முன்ன மெண்ணிய வெண்ணி யாங்கே
மாறிய பிறப்பி னல்கு மலையிது காண்மின் காண்மின்.

     (இ - ள்.) சீறுகொள் இலங்கை வேந்தைச் செகுத்திட -
சினத்தலைக்கொண்ட இலங்கை மன்னனாகிய இராவணனைக் கொல்லுதற்கு,
இராமன் பூசித்து - இராமன் வழிபட்டு, ஆறு அணி விரூபக்கண்ணன்
அருள்பெறு தலம் ஈது - கங்கையை யணிந்த விரூபாக்கனாகிய
சிவபெருமானது திருவருளைப் பெற்ற ஏமகூடம் இத் திருப்பதியாம்; உம்பர்
ஏறி வீழ்ந்து இறந்தோர் - உச்சியில் ஏறிக் கீழே வீழ்ந்து இறந்தவர்கள்,
முன்னம் எண்ணிய எண்ணியாங்கு - முன் எண்ணியவற்றை எண்ணியவாறே
அடைய, மாறிய பிறப்பில் நல்கும் மலை இது - மறு பிறவியில் அவர்கட்கு
அளிக்குந் திருப்பருப்பதம் இது; காண்மின் காண்மின் - இவற்றைப்
பாருங்கள் பாருங்கள்.

     சீறு, முதனிலைத் தொழிற்பெயர். விரூபக் கண்ணன் - விரூபாக்கன்;
ஏனைக் கண்களின் வேறுபட மேனோக்கிய அனற் கண்ணனாகலின்
இறைவன் விரூபாக்கன் எனப் பெறுவன். இப்பதி விரூபாக்கம் எனவும்
ஏமகூடம் எனவும் வழங்கப் பெறும்; இதனை,