எடுத்தருளுஞ் சேவடிக்கீ ழென்றுமிருக் கின்றாரை
அடுத்தபெருஞ் சீர்பரவ லாரளவா யினதம்மாழு |
என்னும் திருத்தொண்டர்
புராணச் செய்யுட்களா னறிக. கற்புடை
யொருத்தி நோற்கும் பிலம் - உமாதேவியார் திருக்கைலையினின்றும்
எழுந்தருளி வந்து இறைவனைப் பூசித்து எண்ணான்கு அறங்களும் செய்து
கொண்டு தவம்புரியும் பிலம்; காஞ்சீபுரம். இது சத்தபுரிகளுள் ஒன்று;
கச்சியேகம்பம், கச்சிமேற்றளி, கச்சியனேகதங்காவதம், கச்சிமயானம்,
ஓணகாந்தன்றளி, கச்சிநெறிக் காரைக்காடு என்னும் திருப்பதிகளைத்
தன்னகத்துடையது. மூவர் தேவாரமும் பெற்ற தொண்டை நாட்டுப்
பெரும்பதி. இதன் பெருமைகள் அளவிறந்தன; அவற்றைக் காஞ்சிப்
புராணம் முதலியவற்றானறிக. பிலம், ஆகுபெயர். (13)
திருமறு மார்பன் காவற் செயல்பெற வரனைப் பூசித்
திருகர முகிழ்த்து நேர்நின் றேத்திட மிதுவா மோத்தின்
உரைவரம் பகன்ற முக்க ணுத்தமன் சந்தை கூட்டி
அருமறை யறவோர்க் கோது வித்திட மதனைக் காண்மின். |
(இ
- ள்.) திருமறு மார்பன் - திருமகளையும் மறுவினையுமுடைய
மார்பினை யுடைய திருமால், காவல் செயல்பெற - காவற்றொழிலைப்
பெறுதற்கு, அரனைப் பூசித்து - சிவபெருமானை வழிபட்டு, இருகரம்
முகிழ்த்து நேர்நின்று ஏத்து இடம் இது - இரண்டு கைகளையுங் கூப்பி
எதிர்நின்று துதித்த திருமாற் பேறென்னும் பதி இது; ஓத்தின் உரைவரம்பு
அகன்ற முக்கண் உத்தமன் - மறையி்ன்பொருளெல்லையைக் கடந்த
முக்கண்ணிறைவன், அறவோர்க்கு சந்தை கூட்டி அருமறை ஓதுவித்த இடம்
அதனைக் காண்மின் - முனிவருக்குச் சந்தை கூட்டி அரிய மறையினை
ஓதுவித்த இடமாகிய அத்திருவோத்தூரைக் காணுங்கள்.
மறு
- ஸ்ரீவத்ஸம். திருவாகிய மறு என்றுமாம். ஏத்திடம் -
திருமாற்பேறு; திருமால் கண்ணினை இடந்து பூசித்து இறைவன்பாற் சக்கரம்
பெற்றது; இது திருஞான சம்பந்தர், திருநாவுக்கரையர் என்னும் இருவர்
தேவாரம் பெற்ற தொண்டை நாட்டுத் திருப்பதி. சந்தை அநுட்டு முதலிய
சந்தசுகள்; சந்தை கூட்டி என்பதற்கு வேதவாக்கியங்களை ஒருசேரச்
சொல்வித்து என்றுரைப்பாருமுளர். ஓதுவித்த என்பதன் அகரம் விகாரத்தால்
தொக்கது. ஓதுவித்த இடம் - சிவபெருமான் தேவர்கட்கும் முனிவர்கட்கும்
வேதத்தை ஓதுவித்த தலம்; திருவோத்தூர்; இது திருஞானசம்பந்தப்
பெருமான் பதிகம்பாடி ஆண்பனையைப் பெண்பனையாக்கிய அற்புதம்
நிகழப்பெற்றது; திருஞான சம்பந்தர் தேவாரம் பெற்ற தொண்டைநாட்டுத்
திருப்பதி.
ழுகுரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுண் ஞானசம் பந்தன்சொல்ல
விரும்பு வார்வினை வீடேழு |
என்னும் சம்பந்தர்
திருக்கடைக் காப்பு நோக்கற்பாலது. (14)
அடிமுடி விலங்கும் புள்ளு மளந்திடா தண்டங் கீண்டு
நெடுகிய நெருப்பு நின்ற நிலையிது முள்வாய்க் கங்க
வடிவெடுத் திருவர் நோற்கு மலையிது பல்வே றூழி
இடையுற முன்னும் பின்னு மிருக்குமக் குன்றைக் காண்மின். |
|