யெல்லாங் கொன்று
அவ்வந்தகனைச் சூலத்தாற் குத்தியேந்தி அமரரைக்
காத்தனர் என்பது. சத்தியும் சிவமுமாயிருந்து உயிர்கட்குப் போக முத்திகளை
நல்குதலின் புண்ணியன் என்றார். பிறசமயத்தாசிரியரும்
எனச் சிவபிரானைக்
கூறுதல் காண்க.
புண்ணியன்புரம்
- திருக்கோவலூர் வீரட்டம்; இஃது அட்ட வீரட்டத்து
ளொன்று; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரையர் என்னும் இருவர் பாடல்
பெற்ற நடுநாட்டுத் திருப்பதி. மூவர் - சுதன்மன், சுசீலன், சுபுத்தி என்பார்.
இறைவன் முப்புரம் எரித்த ஞான்று மூவர்க்கு அருள் செய்தமையை
ழுபூவார் மலர்கொண் டடியார் தொழுவார்
புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்க ளெரித்த வன்று மூவர்க் கருள் செய்தார்
தூமா மழைநி்ன் றதிர வெருவித் தொறுவின் னிரையோடும்
ஆமாம் பிணைவந் தணையுஞ் சார லண்ணா மலையாரேழு |
என்னும் ஆளுடைய
பிள்ளையார் திருவாக்கா லறிக.
மூவரன்பிற்
பட்டவன்பதி - திருவதிகை வீரட்டம்; அட்டவீரட்டத்து
ளொன்று; மருணீக்கியார் தமக்கையாராகிய திலகவதியம்மையாரைப் பணிந்து
திருநீறு பெற்றுக் கூற்றாயினவாறு என்னும் பதிகம்பாடிச் சூலைநோய் நீங்கி,
இறைவனளித்த திருநாவுக்கரசர் என்னும் பெயரினை யெய்திப்
பாடற்றொண்டுடன் உழவாரத் தொண்டு புரிந்த பதி. மூவர் தேவாரமும்
பெற்ற நடுநாட்டுத் திருப்பதி. (16)
சத்திய ஞானா
னந்த தத்துவ மசைவற் றாடும்
நித்திய பரமா னந்த நிறையருண் மன்ற மீது
முத்தியங் குதித்தோ ரெய்தும் பதியது முதனூ னான்கும்
பத்தியிற் பூசித் தேத்தும் பதியிது வாகும் பார்மின். |
(இ
- ள்.) சத்திய ஞான ஆனந்த தத்துவம் - சச்சிதானந்த
மெய்ப்பொருளாகிய திருக்கூத்தப்பெருமான், அசைவு அற்று ஆடும் -
அசைவின்றி ஆடி யருளப் பெற்ற, பரம ஆனந்த நிறை நித்திய அருள்
மன்றம் ஈது - சிவானந்தம் நிறைந்த அழியாத அருண்மன்றமாகிய சிதம்பரம்
இது; அங்கு உதித்தோர் முத்தி எய்தும் பதி அது - தன் கட் பிறந்தவர்
வீடுபேற்றினை அடையப்பெறும் திருப்பதியாகிய திருவாரூர் அது; முதல்
நூல் நான்கும் - முதல் நூலாகியமறைகள் நான்கும், பத்தியில் பூசித்து
ஏத்தும் - அன்போடு வழிபட்டுத் துதிக்கும், பதி இது ஆகும் -
திருமறைக்காடு இதுவாகும்; பார்மின் - பாருங்கள்.
சத்தியம்
ஞானம் ஆனந்தம் - சச்சிதானந்தம். தத்துவம் -
மெய்ப்பொருள். தாம் அசைதலின்றியே எவ்வுயிரையும் அசைவிப்பாராகலின்
அசைவற்றாடும் என்றார்; வியாபகப் பொருட்கு அசைவு கூடாமை அறிக.
மன்றம்
- பொற்சபை; திருச்சிற்றம்பலம்; அதனையுடைய தில்லைப்பதி.
இஃது ஆகாய விலிங்கத்தலம்; விராட் புருடனுக்கு அநாகதமாகிய இதய
கமலமாகவுள்ளது. சகல வேதாகமாதி மெய்ந்நூல்களாற் போற்றப்படும் இதன்
பெருமை அளவிட முடியாதது. இது மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டு
முதற்றிருப்பதி.
|