498திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



உமாதேவியார் மயிலுருக் கொண்டு பூசித்தமையால் மயிலாடுதுறை என்றும்
மாயூரம் என்றும் பெயர் பெற்ற இப்பதி என்க. துலா - துலா விராசியில்
ஆதித்தன் இருக்கும் ஐப்பசித் திங்கள். பொன்னித்தானம் - காவிரியில்
யாவரும் நீராடும் தீர்த்த விசேடத்தை யுடைய இடம். ஐப்பசி அமாவாசையில்
எல்லாத் தீர்த்தங்களும் இதன் கண் வந்து நீராடும் என இதன் சிறப்புக்
கூறப்பெற்றுளது. மயிலாடுதுறை திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும்
இருவர் தேவாரம் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. மூன்று கோடி முனிவர்
வழிபடும் மூதூர் - திருக்கோடிகா; இதுவும் இவ்விருவர் தேவாரம் பெற்ற
சோணாட்டு்த் திருப்பதி. அறக்கடவுள் - இயமதருமன். தருமன்
பூசித்தமையால் தருமபுரம் எனப்பட்டது. இது திருஞானசம்பந்தர் (யாழ்முரி)
பதிகம் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. (19)

கோடுநான் குடைய வேழந் தானவன் குறைத்த கோட்டைப்
பாடற நோற்றுப் பெற்ற பதியிது மாலை சாத்துந்
தாடகை மானங் காப்பான் றாழ்ந்துபூங் கச்சிட் டீர்க்கும்
பீடுறு கலய னன்பி னிமிர்ந்தவெம் பிரானூ ரீதால்.

     (இ - ள்.) கோடு நான்கு உடைய வேழம் - நான்கு கொம்பினை
யுடைய ஐராவத மென்னும் யானை, தானவன் குறைத்த கோட்டை -
அவுணனாகிய பானுகோபன் வெட்டிய தனது கொம்புகளை, பாடு அற
நோற்றுப் பெற்ற பதி இது - துன்பம் நீங்கத் தவஞ் செய்து பெற்ற
திருவெண்காடு இது; மாலை சாத்தும் தாடகை மானம் காப்பான் - மாலை
சூட்டும் தாடகை என்னும் மாதின் மானத்தைக் காக்கும் பொருட்டு, தாழ்ந்து
- வளைந்து, பூங்கச்சு இட்டு ஈர்க்கும் - அழகிய கச்சினைப் பூட்டி இழுத்த,
பீடு உறு கலயன் அன்பின் நிமிர்ந்த - பெருமை பொருந்திய
குங்கிலியக்கலய நாயனார் அன்பினால் நிமிர்ந்த, எம்பிரான் ஊர் ஈது -
எமது பிரான் ஊராகிய திருப்பனந்தாள் இதுவாகும்.

     வெள்ளை யானை பூசித்தமையால் வெண்காடு எனப் பெற்றது. யானை
வழி பட்டதனை,

ழுசக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானு மடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடு வினைதுரக்கும்
முக்குளநன் குடையாணு முக்கணடை யிறையவனேழு

என்னும் சம்பந்தர் திருவாக்கா னறிக. திருவெண்காடு மூவர் தேவாரமும்
பெற்ற சோணாட்டுத் திருப்பதி. தாழ்ந்து பின் நிமிர்ந்த என்க. தாடகை
மானங் காப்பான் தாழ்ந்த வரலாறாவது அன்பிற் சிறந்த தாடகை யென்னும்
மாதராள் இறைவனை வழிபட்டு வருங்காலை ஒருநாள் திருப்பள்ளித்
தாமத்தைக் கையிற் கொண்டு சாத்த லுற்ற பொழுது உடுத்திருந்த உடை
நெகிழலுற்றமையின் அதனை இரு முழங்கையாலும் இடுக்கிக் கொண்டு
மாலையைச் சாத்தலாற்றாது வருந்தி நிற்க, இறைவன் அம் மாதின் அன்புக்
கிரங்கித் திருமுடி சாய்த்து மாலையை ஏற்றருளினர் என்பது. தாடகை பூசித்
தமையால் அது தாடகையீச்சரம் எனப் பெற்றது. கலயன் - மெய்யடியார்
அறுபத்து மூவருள் ஒருவராகிய குங்கிலியக்கலயனார். தாடகை பொருட்டுச்
சாய்ந்து நின்ற சிவ லிங்கப் பெருமானைச் செவ்வே நிறுத்தி வழிபட


     பா - ம். தாபதன்.