வரலாற்றை வரகுணனுக்குச்
சிவலோகங் காட்டிய படலத்தா னறிக. இப்பதி
தமிழில் திருவிடை மருதூர் எனவும், வடமொழியில் மத்தியார்ச்சுனம் எனவும்
கூறப்படும். வடக்கே மல்லிகார்ச்சுனமும் தெற்கே புடார்ச்சுனமும் இருக்க
இஃது இடையே அமைந்தமையின் இப்பெயரினதாயிற்று என்ப; தைப்பூசத்
தீர்த்த விசேட முடையது; இது,
ழுபாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு மானிடை மருதினில்
பூச நாம்புகு தும்புன லாடவேழு |
எனத் தேவாரத்திலும்
குறிக்கப்பெற்றுளது. இது மூவர் தேவாரமும் பெற்ற
சோணாட்டுத் திருப்பதி. மாமகம் - பன்னிரண்டாண்டிற் கொருமுறை
வியாழன் சிங்கவிராசியில் இருக்குங் காலத்து வரும் மாசி மகம். அகம் -
பாவம். யாவர் பாவத்தையும் போக்கும் கங்கை தன்னை யடைந்த
பாவத்தைப் போக்குதற்கு வந்து முழுகும் மாமக தீர்த்தத்தையுடைய பதி
யெனத் தீர்த்தவிசேடம் கூறியவாறாயிற்று. உபலக்கணத்தால் ஏனைய
புண்ணிய நதிகளும் கொள்க;
ழுகங்கை யாளவள் கன்னி யெனப்படும்
கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலேழு |
என்றும்,
ழுகோதா விரியுறை யுங்குட மூக்கிலேழு |
என்றும் திருக்குறுந்தொகையுள்
வருதல் காண்க.
புனிதநீர்ப்
பதி - திருக்குடமூக்கு; இது கும்பகோணம் எனவும், திருக்
குடந்தை எனவும் கூறப்படும்; ஒரு பிரளய வெள்ளத்தில் எல்லா
வுயிர்களையும் சேமித்து இட்ட குடத்தின் மூக்கு இருந்த இடமாதலின்
இப்பெய ரெய்திற்று என்ப; இது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும்
இருவர் பாடல் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. (25)
குருமொழி
தந்தைக் கீந்தெங் குருவுறை மலையீ தெங்கோன்
கருமுகில் வண்ணத் தண்ணல் கண்ணிடந் தடியிற் சாத்தப்
பொருவிற லாழி யீந்த புரமிது நந்தி யெந்தை
திருவுரு வடைய நோற்ற தலமிது தெரிந்து காண்மின். |
(இ
- ள்.) குருமொழி தந்தைக்கு ஈந்து எம்குரு உறைமலை ஈது -
உபதேச மொழியினைத் தன் தந்தையாருக்கு அருளி எமது குருவாகிய
சாமிநாதன் உறையும் சுவாமிமலை இதுவாகும்; கருமுகில் வண்ணத்து
அண்ணல் - கரியமுகில் போன்ற நிறத்தினையுடைய திருமால், கண் இடந்து
அடியில் சாத்த - கண்ணைத் தோண்டித் திருவடியிற் சாத்த, பொருவிறல்
ஆழிஈந்த எங்கோன் புரம் இது - பொருதற் குரிய வலியினையுடைய திகிரிப்
படையை அளித்தருளிய எமது சிவபெருமான் எழுந்தருளிய திருவீழிமிழலை
இதுவாகும்; நந்தி - திருநந்தி தேவர், எந்தை திருஉரு அடைய நோற்றதலம்
இது தெரிந்து காண்மின் - எமது தந்தையாகிய சிவபெருமான்
திருவுருவத்தைப் பெறுதற்குத் தவம்புரிந்த திருவையாறென்னும் இப்பதியினை
ஆராய்ந்து காணுங்கள்.
|