அருச்சனைப் படலம் 505



கண்டு நாட்டு நகர்வளங்க ணடந்து நடந்து கண்கள்விருந்
துண்டு மீள வகல்விசும்பா றொழுகி வலமா வருமுனிவர்
விண்டு ழாவுங் கொடுங்குன்றுந் தளிப்புத் தூரும் விரிபொழில்வாய்
வண்டு பாட மயிலாடல் பயிலா டானை வளநகரும்.

     (இ - ள்.) நாடு நகர் வளங்கள் - நாட்டு வளம் நகர வளங்களை,
கண்கள் நடந்து நடந்து கண்டு விருந்து உண்டு மீள - கண்கள் சென்று
சென்று கண்டு விருந்தருந்தி மீளாநிற்க, அகல்விசும்பு ஆறு ஒழுகி
வலமாவரு முனிவர் - அகன்ற வானின் வழியாகச் சென்று வலமாக வரும்
முனிவர்கள், விண்துழாவும் கொடுங்குன்றும் - வானையளாவிய
திருக்கொடுங்குன்றமும், தளிப்புத்தூரும் - திருத்தளிப்புத்தூரும், விரிபொழில்
வாய் வண்டு பாட - விரிந்த சோலையின்கண் வண்டுகள் பாடாநிற்க, மயில்
ஆடல் பயில் ஆடானை வளநகரும் - மயில்கள் ஆடலைச் செய்யும்
திருவாடானை யென்னும் வளமிக்க பதியும்.

     கொடுங்குன்று - திருக்கொடுங்குன்றம்; பிரான்மலை; திருஞானசம்பந்தர்
பதிகம்பெற்ற பாண்டிநாட்டுத் திருப்பதி. தளி - கோயில்; திருப்புத்தூரிலுள்ள
கோயில் திருத்தளி என்றே வழங்கப் பெறுதலை,

ழுதிருப்புத்தூரிற் றிருத்தளியான் காணவனென் சிந்தையானேழு

என்னும் அப்பர் தேவாரத்தா லறிக. இது திருஞான சம்பந்தர்,
திருநாவுக்கரசர் என்னும் இருவர் தேவாரம்பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி.
ஆடானை - திருவாடானை; பிருகு முனிவர் துருவாசர் சாபத்தால் ஆட்டுத்
தலையும் யானை யுடலும் பெற்றுப் பூசித்துச் சாபம் நீங்கினமையால் இப்பெய
ரெய்திற் றென்ப. இது திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற பாண்டி நாட்டுத்
திருப்பதி. (31)

சரத வேதம் பரவுபுன வாயி னகருந் தவசித்தர்
இரத வாதஞ் செய்துசிவ னுருவங் கண்ட வெழினகரும்
வரத னாகி யானுறையுங் கானப் பேரு மலைமகளை
விரத யோக நெறிநின்று மணந்தார் சுழியல் வியனகரும்.

     (இ - ள்.) சரத வேதம் பரவு புனவாயில் நகரும் - உண்மையாகிய
மறை துதிக்கும் திருப்புனவயி லென்னுந் திருப்பதியும், தவ சித்தர் - தவ
வடிவுடைய சித்த மூர்த்திகள், இரத வாதம் செய்து - பொன்னனையாள்
பொருட்டு இரசவாதஞ் செய்து, சிவன் உருவம் கண்ட எழில் நகரும் -
சிவபிரான் திருவுருவங் கண்ட அழகிய திருப்பூவணமும், அரன் வரதனாகி
உறையும் கானப்பேரும் - இறைவன் அருட்கொடை யுடையனாய்
எழுந்தருளிய திருக்கானப்பேரும், மலைமகளை விரத யோக நெறி நின்று
மணந்தார் - பார்வதி தேவியாரை விரதத்தையுடைய யோக நெறியில் நின்று
மணஞ் செய்தருளிய சிவபெருமானது, சுழியல் வியன் நகரும் - திருச்சுழிய
லென்னும் சிறந்த பதியும்.

     புனவாயில் - திருப்புனவாயில்; திருஞானசம்பந்தர், நம்பியாரூரர்
என்னும் இருவர் தேவாரம் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. சிவனுருவங்
கண்ட எழினகர் - திருப்பூவணம். தவ சித்தர் இரசவாதஞ் செய்த வரலாற்றை
இப் புராணத்து இரச வாதஞ் செய்த படலத்தா லறிக. இப்பதியில் தமிழ்
நாட்டு மூவேந்தரும் இறைவனை வழிபட்டன ரென