ழுமுறையார் முடிசேர் தென்னர் சேரர் சோழர்க டாம்வணங்கும்
திறையா ரொளிசேர் செம்மை யோங்குந் தென்றிருப் பூவணமேழு |
என்னும் ஆளுடைய பிள்ளையார்
திருவாக்கா லறியலாகும்; சுந்தரமூர்த்திகள்
இத் தலத்தை மூவேந்தரோடும் தரிசித்தனரெனத் திருத்தொண்டர் புராணம்
கூறும்; இது மூவர் தேவாரமும் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. கானப்பேர்
- திருக்கானப் பேர். நம்பியாரூரர் சேரமான் பெருமாளுடன் திருச்சுழியலில்
இறைவனைத் தரிசித்துக்கொண்டு எழுந்தருளியிருக்கும் பொழுது
கானப்பேருடையார் காளை வடிவங் கொண்டு கையிற் பொற்செண்டும்
முடியிற் சுழியமும் உரையராய் ஆரூரர் கனவிற் றோன்றி நாம் இருப்பது
கானப்பேர் என்று அருளிச் செய்ய, அவர் ழுதொண்டரடித் தொழலும்ழு
என்று பதிகந் தொடங்கி, ழுகண்டு தொழப் பெறுவ தென்றுகொலோ வடியேன்
கார்வயல்சூழ் கானப்பேருறை காளையையேழு என்று பாடிக்கொண்டு வந்து
தரிசித்தமையின் இது காளையார் கோயில் என வழங்கும் - இத்தலம்
திருஞான சம்பந்தர், நம்பியாரூரர் என்னும் இருவர் பாடல் பெற்ற பாண்டி
நாட்டுத் திருப்பதி. சுழியல் - திருச்சுழியல்; நம்பியாரூரர் பதிகம் பெற்ற
பாண்டி நாட்டுத் திருப்பதி. (32)
மறவா ளிலங்கை யிறைமகனை வதைத்த பழியான் மருண்டரியன்
றறவா ணேமி யளித்தவனை யர்ச்சித் தகன்ற வணிநகரும்
நிறவாண் முத்தும் வயிடூய நிரையும் பொன்னும் விளைபொருநைத்
துறைவாய்ப் பிறவாக் கடவுள்வேய் வயிற்றிற் பிறந்த தொன்னகரும். |
(இ
- ள்.) மறவாள் இலங்கை இறைமகனை - கொலைத்
தொழிலையுடைய வாட்படையுடைய வேந்தனாகிய இராவணனை, வதைத்த
பழியால் - கொன்ற பாவத்தினால், அரி மருண்டு - திருமால் மன மயங்கி,
அன்று அறவாள் நேமி அளித்தவனை - முன்னொரு காலத்து அறம்
பொருந்திய ஒளியினையுடைய திகிரிப்படையினைக் கொடுத்தருளிய
இறைவனை, அர்ச்சித்து அகன்ற அணி நகரும் - வழிபட்டு அப்பழியின்
நீங்கிய அழகிய திருவிராமேச்சுரமும், நிறம் வாள் முத்தும் வயிடூய நிரையும்
- மிக்க ஒளியினையுடைய முத்துக்களும் வயிடூரிய வரிசைகளும், பொன்னும்
விளை பொருநைத் துறைவாய் - பொன்னும் விளைகின்ற
பொருநைத்துறையின்கண், வேய் வயிற்றில் - மூங்கிலின் வயிற்றில், பிறவாக்
கடவுள் பிறந்த தொல் நகரும் - யாண்டும் பிறவாத இறைவன் வந்து
பிறக்கப் பெற்ற பழமையை யுடைய திருநெல்வேலியும்.
அரி
- திருமாலின் அவதாரமாகிய இராமன். சிவபத்தியுடைய
இராவணனைக் கொன்ற பழி தீருமாறு இராமன் சிவலிங்கம் தாபித்துப்
பூசித்தமையால் இஃது இராமேச்சுரம் எனப் பெற்றது; இவ் வரலாற்றைச்
சேதுபுராண முதலியவற்றா லறிக;
ழுமானன நோக்கியை தேவிதன் னையொரு
மாயையால்
கானதில் வவ்விய காரரக் கன்னுயிர் செற்றவன்
ஈனமி லாப்புக ழண்ணல் செய்தவிரா மேச்சுரம்
ஞானமு நன்பொரு ளாகிநின்ற தொரு நன்மையேழு |
என ஆளுடைய
பிள்ளையாரும்,
|