தருமிக்குப் பொற்கிழி யளித்த படலம் 51



     நந்தவனம் நந்தனம் என மரீஇயது; மகிழ்ச்சியைத் தரும் பூந்தோட்டம்
என்பது பொருள். (2)

மாதவி பாதிரி தாதகி கூவிள மந்தாரந்
தாதவிழ் மல்லிகை முல்லையி லஞ்சி தடங்கோங்கம்
வீதவழ் கொன்றை கரந்தைசெ ழுங்கர வீரந்தண்
போதவிழ் நந்தி செருந்திகு ருந்தம் புன்னாகம்.

     (இ - ள்.) மாதவி பாதிரி தாதகி கூவிளம் மந்தாரம் - குருக்கத்தியும்
பாதிரியும் ஆத்தியும் வில்வமும் மந்தாரமும், தாது அவிழ் மல்லிகை -
மகரந்தத் தொடு மலர்ந்த மல்லிகையும், முல்லை இலஞ்சி தடம் கோங்கம் -
முல்லையும் மகிழும் பெரிய கோங்கும், வீ தவழ் கொன்றை கரந்தை
செழுங்கரவீரம் - வண்டுகள் மொய்க்கும் கொன்றையும் கரந்தையும் வளவிய
அலரியும், தண்போது அவிழ் நந்தி செருந்தி குருந்தம் புன்னாகம் -
தண்ணிய போது விரிந்த நந்தியாவட்டமும் செருந்தியும் குருந்தமும்
புன்னாகமும். (3)

முண்டக மென்கடி நீலமு தற்பல முப்போதும்
எண்டிசை யுங்கம் ழும்படி நந்தன மெங்குந்தேன்
உண்டிசை வண்டு படிந்துமு ரன்றிட வுண்டாக்கி
வண்டிமிர் சண்பக நந்தன முந்தனி வைத்தானால்.

     (இ - ள்.) முண்டகம் மென்கடி நீலமுதல் பல - தாமரையும் மெல்லிய
மணமுள்ள நீலோற்பலமுமாகிய இவை முதலிய பல மலரும், முப்போதும்
எண் திசையும் கமழும்படி - மூன்றுகாலத்தும் எட்டுத் திக்குகளிலும்
மணங்கமழுமாறு, நந்தனம் - திருநந்தவனத்தினை, எங்கும் தேன் படிந்து
உண்டு வண்டு இசைமுரன்றிட - எங்கும் தேனிற்படிந்து அதனைப் பருகி
வண்டுகள் இசைபாட, உண்டாக்கி - ஆக்குவித்து, வண்டு இமிர் சண்பக
நந்தனமும் - வண்டுகள் ஒலிக்கும் சண்பக நந்தவனமும், தனிவைத்தான் -
தனியே வைத்தான்.

     முப்போது - காலை, நண்பகல், மாலை என்பன. கமழ என்பது
கமழும்படி என வழக்கில் வந்தது. மகரந்தத்திற் படிந்து என்றுமாம். (4)

பொய்த்திடு நுண்ணிடை மங்கல மங்கையர் பொன்பூண்டார்
ஒத்தெழு சண்பக மொய்த்தவ ரும்ப ருடைந்தெங்கும்
வைத்திடு நந்தன வாசம்வி ழுங்கி மணங்கான்று
பைத்து மலர்ந்தன கண்டு மகிழ்ந்து பரித்தேரான்.

     (இ - ள்.) பொய்த்திடு நுண் இடை மங்கல மங்கையர் - இளைத்த
நுண்ணிய இடையினையுடைய மங்கலமகளிர், பொன் பூண்டார் ஒத்து -
பொன்னணி பூண்டதை யொத்து, எழு சண்பகம் - மேலெழுந்த சண்பகங்கள்,
மொய்த்த அரும்பர் உடைந்து - நெருங்கிய அரும்புடைந்து, எங்கும்
வைத்திடு நந்தனவாச விழுங்கி - வேறெங்கும் வைத்த நந்தவனத்தின்